குமட்டல் - வாந்தியை தடுக்கும்: சிலர் நீண்ட தூரம், கார், பஸ் போன்றவற்றில் பயணம் செய்தால் வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும், அவர்கள் இஞ்சி சர்க்கரை சேர்த்த இஞ்சிமரப்பா எனப்படும் இனிப்பு வகையை வாயில் அடக்கி கொண்டால் வாந்தியோ , குமட்டலோ வராது.
வயிற்று பிரச்சனைக்கு நல்லது: சாப்பிட்ட பின் வயிறு உப்புசம் அடைதல், மற்றும் செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு, இஞ்சி கலந்த நீர் அல்லது தேநீர். இவ்வகை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவு அருந்திய பின் இஞ்சி சேர்த்த நீர் அருந்துவது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
வீக்கத்தை சரி செய்ய வல்லது: வீட்டில் இருக்கும் பெரியவர்கள், மூட்டு வழியால் அவதி பட்டு வந்தால் அவர்களுக்கு கட்டாயம் இஞ்சி சேர்த்த தேநீர் போட்டு கொடுங்கள். திடீர் போட்டது போக மீதம் உள்ளவற்றை வலி உள்ள இடங்களில் வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு: ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பால் அவதி படுபவர்களுக்கு தண்ணீரில் இஞ்சி மற்றும் பனைகல்கண்டு சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, கொடுத்தால் விரைவில் சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது: இஞ்சியில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும், இது இருதய பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்க உதவும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும் தமனிகளில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்: மாதவிடாய் பிடிப்புகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். அடிவயிற்றின் கீழ் சூடான இஞ்சி தேநீரில் நனைத்த ஒரு துண்டை வைக்கவும். இது தசைகளை தளர்த்துவது மட்டுமல்லாமல், வலியை நீக்குகிறது. அதேசமயம், ஒரு கப் இஞ்சி டீயை தேனுடன் குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது, எனவே இனி கண்டிப்பாக தினமும் நீங்க அருந்தும் தேநீரில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள்.