Hot Water Bathing: கீஸர் தண்ணீரா? கேஸ் அடுப்பு தண்ணீரா? குளிக்க எது பெஸ்ட்? சரும நிபுணர்கள் சொல்லும் உண்மை தகவல்!

Published : Jul 12, 2026, 06:55 AM IST

Geyser Water vs Stove Water: காலையில் எழுந்ததும் குளிக்க கீஸர் வாட்டார் நல்லதா? அல்லது அடுப்பில் வைத்து குளிப்பது நல்லதா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
15
கீஸர் Vs அடுப்பு

காலையில் எழுந்ததும் கீஸர் ஆன் செய்து தற்போதை பழக்கம் வழக்கம். சிலர் இன்னும் பாரம்பரியமாக அடுப்பில் அல்லது கேஸில் தண்ணீ வைத்து குளிக்கிறார்கள். இதில் எது உடம்புக்கு நல்லது? சரும நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

25
கீஸர் அல்லது வாட்டர் ஹீட்டர்

நகர வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்த கீஸர் ஒரு வரம். பட்டனை தட்டுனால் போதும் சில நிமிடங்களில் சுடுதண்ணீர் ரெடி. நவீன கீஸர்களால் வெப்பநிலையை கண்ட்ரோல் செய்யலாம். ஆனால், கீஸரை சரியா சர்வீஸ் செய்யவில்லை என்றால் அதில் தாது உப்புக்களும் (Mineral deposits) துருவும் வடிந்துவிடும். அந்த தண்ணீரில் குளிச்சால், சருமத்தில் அலர்ஜி, அரிப்பு வரலாம்.

35
அடுப்பில் சூடாக்கிய நீர்

எவ்வளவு தான் டெக்னாலஜி வந்தாலும், பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து குளிக்கின்ற சுகமே தனிதான். குறிப்பாக நாம் கைகளால் பாத்திரத்தை கழுவி தண்ணீர் காய வைப்பதால் அது சுத்தமாக இருக்கும் என்று நம்பிக்கை வரும். மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் இந்த தண்ணீர் உடம்புக்கு இதமாக இருக்கும். ஆனால் இதுக்கு நேரம் அதிகமாகும். அதுமட்டுமல்ல கேஸ் அல்லது விறகு செலவும் கூடும்.

45
அதிக சூடான நீர் உயிருக்கு ஆபத்து

தண்ணீரை கீஸரில் காய வைத்தாலும் சரி, அடுப்பில் காய வைத்தாலும் சரி அது எவ்வளவு சூடாக இருக்கின்றது என்பது தான் முக்கியம். ரொம்பவும் சூடான தண்ணீரில் குளித்தால் சருமத்தில் இருக்கின்ற இயற்கையான எண்ணெய் பசை (Natural oils) போய்விடும். இதனால் சருமம் வறண்டு, அரிப்பு, சுருக்கம் வரும். தலைக்கு குறித்தால், முடி பொலிவிழந்து, வறண்டு போய், அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும்.

55
நிபுணர் ஆலோசனை

உடல்நலத்தைப் பொறுத்தவரை, கீஸர் தண்ணீக்கும் அடுப்புத் தண்ணீக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சில விஷயங்களை கவனிக்க வேண்டும். எப்பவும் வெதுவெதுப்பான (Lukewarm Water) தண்ணீயில் குளிக்க வேண்டும். கீஸரை வருடத்திற்கு ஒருமுறையாவது கிளீன் செய்ய வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் பாத்திரம் சுத்தமாக இருக்கட்டும். குழந்தைகள், வயதானவர்கள், சருமப் பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக வெதுவெதுப்பான தண்ணீயைத்தான் பயன்படுத்த வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories