பிப்ரவரியில் அதானி மகன் திருமணம்! யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா?

Published : Jan 27, 2025, 10:58 PM ISTUpdated : Jan 27, 2025, 11:10 PM IST

Jeet Adani wedding Guest Celebrities list: கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பிப்ரவரி 7, 2025 அன்று திவா ஜெய்மின் ஷாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். எளிமையான பாரம்பரிய திருமணமாக நடைபெறும் என்று அதானி கூறியுள்ளார்.

PREV
16
பிப்ரவரியில் அதானி மகன் திருமணம்! யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா?
Jeet Adani Wedding

ஜீத் அதானியின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தொழிலதிபர் கெளதம் அதானியின் இளைய மகன் திவா ஜெய்மின் ஷாவை பிப்ரவரி 7, 2025 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஜனவரி 21ஆம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் சென்றிருந்த அதானியே தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

26
Gautam Adani's Son

நிருபர்களிடம் பேசிய அவர், திருமணம் எளிமையாக நடைபெறும் என்றார். "நாங்களும் சாதாரண மக்களைப் போலவே வந்திருக்கிறோம். கங்காதேவின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக ஜீத் இங்கு வந்துள்ளார். அவரது திருமணம் எளிமையாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறும்" என்று அதானி கூறினார்.

36
Adani Son Jeet

27 வயதான ஜீத் அதானியின் திருமணத்தில் டெய்லர் ஸ்விஃப்ட் உட்பட உலகளாவிய பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. எலான் மஸ்க், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், டேனியல் கிரெய்க், டெய்லர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பீபர், கன்யே வெஸ்ட், கர்தாஷியன் சகோதரிகள், ரஃபேல் நடால், தில்ஜித் டோசன்ஜ், சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, பில்லி எலிஷ், கோல்ட்ப்ளே, முதலான பலர் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டன் மன்னர் சார்லஸ், போப் ஆகியோரும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

46
Gautam Adani family

பிப்ரவரி 7 ஆம் தேதி அகமதாபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீத்துக்கும் திவாவுக்கும் மார்ச் 2023 இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு 300 விருந்தினர்களுக்கு மேல் வரமாட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

56
Who is Jeet Adani?

யார் இந்த ஜீத் அதானி?

கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் இந்தியாவில் உள்ள ஆறு விமான நிலையங்களை நிர்வகிக்கும் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி ஏர்போர்ட்ஸில் இயக்குநராக உள்ளார். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டம் பெற்றவர். எக்ஸ் கணக்கில் உள்ள பதிவின்படி, ஜீத் அதானியும் விமானியாக பயிற்சி பெற்றவர் என்று தெரிகிறது.

ஜீத் அதானி 2019இல் அதானி குழுமத்தில் சேர்ந்தார் என்று அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. CFO அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்த அவர், மூலோபாய நிதி, மூலதனச் சந்தைகள் மற்றும் கொள்கை வகுப்பு ஆகியவற்றை கவனிந்து வந்தார்.

ஜீத் அதானியின் மூத்த சகோதரர் கரண் அதானி, அதானி குழுத்தின் துறைமுக நிர்வாக நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அவர் பரிதி அதானியை மணந்தார்.

66
Jeet Adani's fiancee

ஜீத் அதானியின் வருங்கால மனைவி யார்?

ஜீத் அதானியின் வருங்கால மனைவி திவா ஜெய்மின் ஷா. இவர் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள். வைர வியாபாரத்தில் உலக அளவில் பெயர் பெற்றவர். ஆனால், அவரது குடும்பம் பெரும்பாலும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்து வருகிறது.

click me!

Recommended Stories