Published : Jan 27, 2025, 09:45 PM ISTUpdated : Jan 27, 2025, 09:55 PM IST
காலை எழுந்தவுடன் பலர் அவர்கள் வீட்டில் செய்யும் முதல் வேலை, டீ மற்றும் காபி தயாரிப்பது. டீ குடிக்காமல் பலருக்கு பொழுதே விடிந்தது போல் இருக்காது. உங்கள் வீட்டில் டி வடிகட்ட பயன்படுத்தும் வலை பல நாட்களுக்குப் பிறகு கருப்பாகிவிடும். இதை எப்படி புதியது போல பளபளப்பாக மாற்றலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக டீ வடிகட்டும் சல்லடை கருப்பானவுடன் அதை தூக்கி எறிந்துவிட்டு புதியதை வாங்குவார்கள் ஏராளம். இன்னும் சிலர் கருப்பாக இருந்தாலும் பயன்படுத்துவார்கள். ஆனால் இது பார்க்க சிலர் சங்கடமாக நினைப்பார்கள். வீட்டில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு தேநீர் சல்லடையைப் பளபளப்பாக்க முடியும், என்று உங்களுக்குத் தெரியுமா? சில குறிப்புகள் இங்கே.
26
வினிகர்
கருப்பாகிவிட்ட தேநீர் சல்லடையைப் பளபளப்பாக்க வினிகர் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு கப் சூடான நீரில் வினிகர் சேர்க்கவும். பின்னர் அதில் டீ வடிகட்டும் சல்லடையை ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால் போதும். டீ வடிகட்டும் சல்லடை பளபளக்கும்.
எலுமிச்சையைக் கொண்டும் டீ வடிகட்டும் சல்லடையைப் புதியது போல மாற்றலாம். எலுமிச்சையை பாதியாக வெட்டி ஒரு பாதியைக் கொண்டு டீ வடிகட்யை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் சிறிது பாத்திரம் துலக்கும் சோப்பு போட்டு தேய்க்கவும். பின்னர் தண்ணீரில் கழுவினால் அழுக்கு நீங்கி வெண்மையாகும்.
46
பேக்கிங் சோடா
சமையலறையில் கிடைக்கும் பேக்கிங் சோடாவும், அழுக்கடைந்த டீ சல்லடையை வெண்மையாக்கும். தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். அந்த நீரில் சல்லடையை ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் வெண்மையாக மாறிவிடும்.
56
தேநீர் சல்லடை சட்டென்று பளபளக்கும்:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அதில் அழுக்கடைந்த டீ வடிகட்டும் சல்லடையைப் போடவும். சிறிது நேரம் ஊற வைத்து பாத்திரம் துலக்கும் சோப்பு சேர்த்து நன்றாகத் தேய்க்கவும். அவ்வளவுதான் தேநீர் சல்லடை சட்டென்று பளபளக்கும்.
66
பேக்கிங் பவுடர்
பேக்கிங் பவுடர் மற்றும் பாத்திரம் துலக்கும் சோப்பு இரண்டின் கலவையும் தேநீர் சல்லடையைப் பளபளப்பாக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீருடன் பாத்திரம் துலக்கும் சோப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும். அந்த நீரில் டீ வடிகட்டும் சல்லடையை 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் போதும்.