Friendship Quiz: உங்க நட்பு எவ்வளவு ஸ்ட்ராங்? 'இந்த' 5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!

Published : Aug 02, 2026, 12:07 PM IST

Friendship Quiz: உங்களது நட்பு எந்தளவிற்கு உண்மையானது? உங்களுக்கான 'பெஸ்ட் பிரெண்ட்' யார் என்பதை கண்டறியும் 5 முக்கிய கேள்விகள் இதோ! மனசாட்சியுடன் பதில் அளித்து, உங்களின் ஆழமான நட்பின் பலத்தையும் நம்பிக்கையையும் சோதித்துப் பாருங்கள் பாஸ்.

PREV
15
Friendship Quiz: உங்க நட்பு எவ்வளவு ஸ்ட்ராங்?

நம்முடைய வாழ்க்கையில் உறவினர்கள் கை விட்டாலும், ஏன் உடன் பிறந்தவர்களே கைவிட்டாலும் நமது இன்ப துன்பங்களில் பங்கேற்று கடைசி வரை கூட வருவது தான் நண்பர்கள்.ஃபிரெண்ட்ஷிப் டே என்றாலே போதும்... ஸ்கூல்-காலேஜ் ஞாபகங்கள், கையில் கட்டிய கலர் கலர் ஃபிரெண்ட்ஷிப் பேண்டுகள், நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிய தருணங்கள், சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யும் போட்டோக்கள் என எல்லாமே நினைவுக்கு வரும்.

ஆனால், காலம் மாற மாற நட்பைப் பேணும் விதமும் மாறியிருக்கிறது. இன்று நூற்றுக்கணக்கான கான்டாக்ட்ஸ், ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்கு மத்தியில், உண்மையான நண்பர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. நல்ல பழக்கமானவருக்கும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்ட நேரத்தில் கூட நிற்கும் உண்மையான நண்பருக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது.

இந்த ஃபிரெண்ட்ஷிப் டே-யில், உங்கள் நட்பை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பினால், கீழே உள்ள 5 கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள். இந்த பதில்களை யாரிடமும் சொல்லத் தேவையில்லை; உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருந்தால் போதும்.

25
1. நீங்க எதுவும் சொல்லாமலே உங்க நண்பர் புரிஞ்சுக்குவாரா?

நீங்கள் சோகமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது, உங்கள் பெஸ்ட் ஃபிரெண்ட் உங்கள் குரல் அல்லது நடவடிக்கையைப் பார்த்த உடனேயே, "ஏதோ சரியில்லையே..." என்று கண்டுபிடித்துவிடுவாரா? அல்லது நீங்கள் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லும் வரை அவருக்கு எதுவும் புரியாதா?

குறிப்பு: எந்தவொரு ஆழமான உறவின் முதல் அறிகுறியே, ஒருவருக்கொருவர் உணர்வுகளை வார்த்தைகள் இன்றிப் புரிந்துகொள்ளும் திறன்தான்.

2. நடுராத்திரி எமர்ஜென்சினா, முதலில் நினைவுக்கு வரும் பெயர் அவரோடதுதானா?

திடீரென்று ஒரு நாள் நடுராத்திரியில் பெரிய பிரச்சினை ஏற்பட்டால், எந்தத் தயக்கமும் இல்லாமல் அவருக்கு போன் செய்வீர்களா? 'உதவிக்கு அவரால் முடிந்ததை நிச்சயம் செய்வார்' என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

குறிப்பு: ஆபத்தில் உதவும் நம்பிக்கைதான் உண்மையான நட்பின் மிகப்பெரிய பரீட்சை.

35
3. ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எல்லாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத சில ரகசியங்கள் இருக்கும். அந்த விஷயங்கள் உங்கள் நண்பருக்குத் தெரியுமா? தெரிந்தாலும், அந்த விஷயங்கள் எப்போதும் உங்கள் இருவருக்குள்ளேயே பத்திரமாக இருக்கும் என்ற உறுதி உங்களுக்கு இருக்கிறதா?

குறிப்பு: ரகசியங்களைக் காக்கும் உன்னத நம்பிக்கையே நட்பைக் காலத்திற்கும் நிலைக்கச் செய்யும்.

4. சண்டைக்குப் பிறகு ஈகோ வருமா... அன்பு வருமா?

எந்த நட்பிலும் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. ஆனால் வாக்குவாதத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம். உங்கள் இருவரில் யாராவது இறங்கிவந்து பேச முன்வருவீர்களா? அல்லது ஈகோ தடுத்து, பல நாட்கள் பேசாமல் இருப்பீர்களா?

குறிப்பு: அமைதியை விடவும், ஈகோவை விடவும் நட்பே முக்கியம் என நினைப்பதே உண்மையான பிணைப்பு.

45
5. உங்கள் வெற்றியில் அவர் முகத்தில் தெரியும் சந்தோஷம் எப்படிப்பட்டது?

நீங்கள் ஒரு பெரிய வெற்றியை அடையும்போது, உங்கள் நண்பர் உங்களைப் போலவே உண்மையிலேயே சந்தோஷப்படுகிறாரா? அல்லது அவருடைய வாழ்த்துகள் வெறும் சம்பிரதாயமாகத் தெரிகிறதா?

குறிப்பு: தன் நண்பனின் வளர்ச்சியையும் சந்தோஷத்தையும், தன் சொந்தச் சந்தோஷமாகக் கொண்டாடுவதே உண்மையான நட்பின் அடையாளம்.

55
என்ன பாஸ் டெஸ்ட்ல பாஸ் ஆகிட்டிங்களா?

இந்த ஐந்து கேள்விகளுக்கும் உங்கள் பதில்களில் பெரும்பாலானவை "ஆம்" என்றால், உங்கள் நட்பு வலுவான நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பின் அடித்தளத்தில் அமைந்துள்ளது!

ஒருவேளை சில கேள்விகளுக்குப் பதில் "இல்லை" என்றால், நட்பு முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. மனம்திறந்து பேசுவதன் மூலமும், விட்டுக்கொடுப்பதன் மூலமும், நேரம் ஒதுக்குவதன் மூலமும் எந்தவொரு உறவையும் இன்னும் ஆழமாக மாற்ற முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories