Fridge: எமனாக மாறிய ஃப்ரிட்ஜ்.! ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்யாதீங்க.! உயிருக்கே உலை வைக்கும்.!

Published : Jun 28, 2026, 05:00 PM IST

Fridge Cleaning Safety: ஃபிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் ஷாக் அடித்து மரணிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபிரிட்ஜ் சுத்தம் செய்யும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
17
Fridge Cleaning Safety

தினசரி இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம்தான். சில வீடியோக்களில் ஸ்வாரசியமாக இருக்கின்றன. ஆனால் சில வீடியோக்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலருக்கும் விழிப்புணர்வாகவும், பாடத்தைக் கற்று தரும் வகையிலும் உள்ளது. குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் ஷாக் அடித்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

27
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ள இந்த வீடியோவில் ஒரு பெண் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். ஃபிரிட்ஜில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு பிரிட்ஜை ஆன் செய்து வைத்துக் கொண்டே அவர் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். திடீரென மின் அதிர்ச்சிக்கு உள்ளான அவர் சற்று தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தலையில் விழுகிறார். இந்த சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா என்பதை தெரியவில்லை. அவரது சமையல் அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மட்டுமே வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!

37
பாதுகாப்பாக இருக்க வேண்டிய முறைகள்

இந்த வீடியோவில் அந்த பெண் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யும் பொழுது அதை அணைக்க மறந்துவிட்டார். இதன் காரணமாக அவருக்கு ஷாக் அடித்துள்ளது. பல பெண்களும் வேலை அழுத்தத்தின் காரணமாகவும், அவசர வாழ்க்கை முறை காரணமாக இவ்வாறு மின்சாதனங்களை தவறுதலாக கையாளுகின்றனர். ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை கையாளும் பொழுது அடிப்படை பாதுகாப்பு விதிகளை தவற விடுவதே இது போன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

47
ஷாக் அடிப்பதற்கு முக்கிய காரணம்

ஃபிரிட்ஜ் சுத்தம் செய்யும் பொழுது ஷாக் அடிப்பதற்கு முக்கிய காரணம் பவர் சப்ளையை அணைக்காமல் இருப்பது. ஃப்ரிட்ஜில் சுவிட்சை அணைக்காமலோ அல்லது பிளக்கை சாக்கெட்டில் இருந்து அகற்றாமல் சுத்தம் செய்ய தொடங்குவது தவறான முறையாகும். ஃபிரிட்ஜை தண்ணீரைக் கொண்டு கழுவும் பொழுது அல்லது ஈரமான துணியால் துடைக்கும் பொழுதோ தண்ணீர் மின்சார கம்பிக்குள் அல்லது கம்ப்ரஸர் பகுதிக்குள் புகுந்துவிடும். தண்ணீர் மின்சாரத்தை கடத்தும் என்பதால் உடனடியாக ஷாக் அடிக்கும். வீட்டில் உள்ள மின் இணைப்பில் எர்த் சரியாக இல்லை என்றாலும் பிரிட்ஜில் மெட்டல் பாடியில் கசிவு மின்சாரம் தேங்கி இருக்கும். அதை தொடும்பொழுது பலத்த மின் அதிர்ச்சி ஏற்படும்.

57
சுவிட்சை மட்டும் அணைத்தால் போதாது

ஃபிரிட்ஜின் பின்புறம் உள்ள ஒயர்களை எலி கடித்திருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி அவை தேய்மானம் அடைந்திருந்தாலோ கம்பி வெளியில் தெரிந்து பாடியில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளது. ஈரமான கைகளுடன் சுவிட்சை தொடுவது, காலில் செருப்பு அணியாமல் வெறும் தரையில் நின்று கொண்டு ஃபிரிட்ஜை தொடுவது மின்சார பாய்ச்சலை உடலுக்குள் எளிதாக்குகிறது. இதை தவிர்க்க சில வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன்னர் ஃபிரிட்ஜை ஆஃப் செய்து பிளக்கை சாக்கெட்டில் இருந்து முற்றிலும் வெளியே எடுத்து, பின்னர் சுத்தம் செய்யத் தொடங்க வேண்டும். சுவிட்சை மட்டும் அணைத்தால் போதாது. பிளக்கை கழற்றுவது மிக பாதுகாப்பான முறையாகும்.

67
ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய முறையான வழிகள் என்ன?

ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும் பொழுதோ அல்லது அதை தொடும்பொழுது எப்போது கால்களில் உலர்ந்த ரப்பர் அல்லது பிளாஸ்டிக் செருப்புகளை அணிந்திருக்க வேண்டும். இது மின்சாரம் நம் உடல் வழியாக தரைக்கு பாய்வதை தடுக்கும். ஃபிரிட்ஜின் உட்பகுதியை துடைக்க லேசான ஈரப்பதம் உள்ள துணியை பயன்படுத்தலாம். ஆனால் ஃபிரிட்ஜின் பின்புறம் சுவிட்ச் பாக்ஸ் மற்றும் கம்ப்ரஸர் உள்ள பகுதிகளில் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீரை ஊற்றக்கூடாது மற்றும் ஈரத் துணையால் துடைக்கக் கூடாது. அங்கு உலர்ந்த துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் வீட்டில் மின் இணைப்பில் எர்த்திங் சரியாக உள்ளதா என்பதை தகுதியான எலக்ட்ரீசியன் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

77
அலட்சியமும், அவசரமும் கூடாது

மேலும் ஃபிரிட்ஜின் ஒயர் எங்கும் வெட்டப்பட்டு இருக்கிறதா அல்லது சேதமடைந்திருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டின் மெயின் போர்டில் RCCB என்கிற பாதுகாப்பு கருவியை பொருத்தலாம். இது வீட்டில் எந்த ஒரு பொருளிலும் லேசான மின் கசிவு ஏற்பட்டால் கூட ஒரு மைக்ரோ நொடியில் வீட்டில் உள்ள மொத்த மின் இணைப்பையும் துண்டித்து உயிரை காப்பாற்றும். ஃபிரிட்ஜை சுத்தம் செய்து முடித்த பிறகு அது முழுமையாக உலர்ந்து விட்டதை உறுதி செய்த பின்னரே பிளக்கை மாற்றி ஆன் செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும் பொழுதே ஆன் செய்யக்கூடாது.

மின்சாதனங்களை கையாளும் பொழுது அலட்சியமும், அவசரமும் பெரிய விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. எனவே சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இது போன்ற விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories