Mosquito Sticks: உங்க வீட்ல இந்த கொசுவத்தி யூஸ் பண்றீங்களா? உஷார்! லேப் டெஸ்ட்டில் ஷாக் ரிப்போர்ட்!

Published : Jun 28, 2026, 03:39 PM IST

Mosquito Sticks: நாம் வீட்டில் பயன்படுத்தும் சில போலி கொசுவத்திகள் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம். 

PREV
14
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கொசுவத்திகள்

வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும் சரி கொசுத்தொல்லை என்பது தீராத தலைவலியாக உள்ளது. கொசுவினால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களும் பர்வுகின்றன. கொசுக்களிடமிருந்து தப்பிக்க, பலரும் வீடுகளில் கொசு விரட்டி காயில்கள் அல்லது ஊதுவத்திகளைப் பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக, சமீபகாலமாக 'ஹெர்பல்', 'நேச்சுரல்' என்ற பெயரில் சந்தைக்கு வரும் கொசுவத்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள். ஆனால், நறுமணம் தந்து கொசுவை விரட்டுகிறது என்று நாம் நினைக்கும் இந்த ஊதுவத்திகள், உண்மையில் நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல அழித்து, உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

போலி கொசுவத்திகளுக்கு மாநில அரசுகள் தடை

மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற போலி மற்றும் சட்டவிரோத பிராண்டுகள் மீது இப்போது நாடு முழுவதும் அரசுகள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் இவற்றைத் தடை செய்துள்ளன. அதாவது கவர்ச்சிகரமான பெயரில் விற்கப்படும் போலி பிராண்ட்களை பறிமுதல் செய்து அவற்றுக்கு தடை விதித்துள்ளனர்.

24
விதிமுறைகள் முழுவதுமாக மீறல்

பொதுவாக இந்த ஊதுவத்திகள் வேம்பு, துளசி, சிட்ரோநெல்லா போன்ற இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், ஆய்வகப் பரிசோதனைகளில் வெளிவந்த உண்மைகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்த சட்டவிரோத ஊதுவத்திகளில், அரசு அனுமதிக்காத மற்றும் அளவுக்கு அதிகமான 'டைமெஃப்ளுத்ரின்' (Dimefluthrin), 'மெப்பர்ஃப்ளுத்ரின்' (Meperfluthrin) போன்ற மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

34
டாக்டர்கள் சொன்ன‌ அதிர்ச்சி தகவல்

ஹோம் இன்செக்ட் கண்ட்ரோல் அசோசியேஷன் (HICA) மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஒரு பொது சுகாதார ஆய்வில், மருத்துவர்கள் சில அதிர்ச்சிகரமான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்:

மருத்துவர்களின் கருத்துப்படி அனுமதி இல்லாத ரசாயனங்கள் கலந்த இந்த கொசுவத்திகளின் புகையைத் தொடர்ந்து சுவாசிப்பதால், மனிதர்களுக்குக் கடுமையான சுவாசப் பிரச்சனைகள் (Major Respiratory Hazards) ஏற்படுகின்றன. இந்த ஆபத்தான புகையால், சிறுவர்களுக்கு அடிக்கடி தொண்டை எரிச்சல், கடுமையான இருமல் மற்றும் அலர்ஜிகள் ஏற்படுகின்றன.

இந்த ரசாயனங்கள் கலந்த ஊதுவத்திகளின் புகை, குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயிருக்கே ஆபத்தாக மாறும் வாய்ப்புள்ளது. தற்போது போலி பிராண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும், சந்தையில் இன்னும் பல புதிய பெயர்களில் அதே ஆபத்தான ரசாயனங்கள் கொண்ட ஊதுவத்திகள் ரகசியமாக விற்கப்படுகின்றன. நீண்டகாலத்திற்கு இந்தப் புகையைச் சுவாசித்தால், நுரையீரல் நோய்கள் வரும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

44
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

நமது ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது. கொசு விரட்டிப் பொருட்களை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் கண்டிப்பாகக் கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:

CIR எண்ணைச் சரிபார்க்கவும்: நீங்கள் வாங்கும் எந்த கொசுவத்தி அல்லது காயில் பாக்கெட்டின் மீதும் CIR (Central Insecticide Registration) எண் இருக்கிறதா என்று பாருங்கள். இந்த எண் இருந்தால் மட்டுமே, அது அரசாங்க ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்டு, பாதுகாப்பான அளவில் ரசாயனங்கள் இருப்பதாகச் சான்றளிக்கப்பட்ட சட்டப்பூர்வமான தயாரிப்பு என்று அர்த்தம்.

கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள்: பாக்கெட் மீது 'ஹெர்பல்' (Herbal) அல்லது '100% ஆர்கானிக்' (Natural) என்று எழுதியிருப்பதை மட்டும் பார்த்து ஏமாற வேண்டாம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முத்திரைகள் இருந்தால் மட்டுமே நம்புங்கள்.

நிபுணர்களின் பரிந்துரை: அரசு அங்கீகாரம் பெற்ற, சந்தையில் நற்பெயர் பெற்ற பதிவு செய்யப்பட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

கொசுக்களைக் கொல்லும் முயற்சியில், நாம் சுவாசிக்கும் காற்றை விஷமாக்கிக் கொள்ளக்கூடாது. எனவே, கொசுவத்திகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories