இந்தியாவின் பெருமைமிகு மூவர்ண கொடி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நமது நாட்டு கொடியை போலவே உலகில் நான்கு நாடுகளின் கொடிகள் உள்ளதாம். அதாவது பார்ப்பதற்கு அச்சுஅசல் அப்படியே இருக்காது, ஆனால் நம் கொடியில் உள்ள அதே மூவர்ணம் கொண்ட கொடிகளாக இவை உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் Niger. பிரெஞ்சு மொழியை தாய் மொழியாக கொண்டு வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாடு தான் Niger. அந்த நாட்டின் தேசிய கொடியானது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது இந்திய நாட்டின் தேசிய கொடி போல தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அசோகச் சக்கரம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு காவிநிறை வட்டம் .இடம்பெற்றிருக்கும்.
உலகிலேயே இரு வெவ்வேறு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே மனிதர் யார் தெரியுமா?