ராதே ஜக்கி, சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் விஜிகுமாரியின் ஒரே மகள் தான் ராதே ஜக்கி. கர்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 1990ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலிருந்தே பரதநாட்டியக் கலைமீது ஆர்வம் கொண்டதால் அதனை கற்று தற்போது பயிற்றுவித்தும் வருகிறார்.
34 வயதான ராதே ஜக்கி, கலை மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற்றவர். அவர் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் பரதநாட்டியத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார், மேலும், சென்னையில் புகழ்வாய்ந்த தக்ஷிணசேத்ராவில் கலை மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஹார்வர்ட் சம்மர் ஸ்கூலில் வணிக மேலாண்மை பட்டயப் படிப்பும் முடத்துள்ளார்.