தைராய்டு இருக்குறவங்க சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே..!!

First Published | Sep 13, 2024, 11:50 AM IST

Worst Food For Thyroid : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Worst Food For Thyroid In Tamil

இன்றைய காலகட்டத்தில் தைராய்டு பிரச்சனை ஒரு சாதாரண பிரச்சனை ஆகிவிட்டது. தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவை இதற்கு காரணம் ஆகலாம். தைராய்டு ஒரு அமைதியான கொலையாளி என்றே சொல்லலாம். ஏனெனில், இதற்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரியாது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் ஹார்மோனின் மாற்றுத்தால்தான் தைராய்டு பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணமாகும். 

மேலும், தைராய்டு சுரப்பியானது தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் தான் நம்முடைய உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை உருவாக்கும். இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் உடல் உடல் எடை குறையும், குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் தான் இந்த ஹார்மோன் அளவோடு சுரக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

உங்களுக்கு தெரியுமா.. தைராய்டு பிரச்சனை பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் வரும். இந்நிலையில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Worst Food For Thyroid In Tamil

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள் :

சோயா உணவுகள் :

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சோயா உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் இருக்கும் சில சேர்மங்கள் உங்களுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சில சமயங்களில் இது ஆபத்தை கூட ஏற்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சோயா பொருட்கள் தைராய்டு ஹார்மோன்களில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருந்தாலும், இது தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இது தவிர, சோயாவில் இருக்கும் நுகர்வு தைராய்டு மருந்துகளை உறிஞ்சும் திறனில் தலையிடும் என்றும் ஆராய்ச்சி சொல்லுகின்றது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் : 

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாகவே இருப்பதால் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது ஆபத்து ஏற்படுத்துவதற்கு கூட வழிவகுக்கும். 


Worst Food For Thyroid In Tamil

கொழுப்பு நிறைந்த உணவுகள் :

இறைச்சி, வறுக்கப்பட்ட உணவுகள், மயோனைஸ், வெண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், இவற்றில் இருக்கும் கொழுப்பு உடலின் திறனை சீர்குலைத்து, தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதை தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் இந்த உணவுகளில் இருக்கும் கொழுப்பானது ஹார்மோன் உற்பத்தி செய்யும் தைராய்டின் திறனில் தலையிடும். எனவே, தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் இது போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

தானிய உணவுகள் :

பிரட், பிஸ்கட், பாஸ்தா, பார்லி, கம்பு போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இவற்றில் குளூட்டன் சத்து அதிகம் இருக்கும். இது தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதை தடுக்கும். 

Worst Food For Thyroid In Tamil

அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் : 

அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் தைராய்டு இருப்பவர்களுக்கு நல்லது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சிக்கலுக்கு வழிவகுக்கும். முழு தானியங்கள் பீன்ஸ் வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் இருக்கும் நார்ச்சத்து தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகள் உறிஞ்சுவதில் தலையிடும். எனவே, தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அதிக நார்சத்து உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில், நீங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிக்கலாம்.

பச்சை காய்கறிகள் :

முட்டைக்கோஸ், பிரக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் நார்ச்சத்து, பிற ஊட்டச்சத்துக்கள் இணைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தைராய்டு உள்ளவர்களுக்கு அயோடின் குறைபாடு பிரச்சனை இருந்தால், அது ஹார்மோன் உற்பத்தியில் தலையிடும். இதனால்தான் இதை சாப்பிடக்கூடாது என்று சொல்லுகின்றனர்.

இதையும் படிங்க:  இந்த 3 அற்புத இயற்கை பொருட்களை சாப்பிடுங்க..தைராய்டுக்கு குட்பை சொல்லுங்கள்!

Worst Food For Thyroid In Tamil

சர்க்கரை உணவுகள் :

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் கே குக்கீஸ் போன்ற அதிக சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் ஊட்டச்சத்துக்களும் இல்லை, கலோரிகளும் அதிகம் உள்ளது. இவை தைராய்டு ஹார்மோனுடன் இணைந்து, உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். மேலும், இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இதை நீங்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

மதுபானம் :

மதுபானம் உடலில் இருக்கும் தைராய்டு ஹார்மோன் அளவுகள், உற்பத்தி செய்யும் திறன் என இரண்டையும் மோசமாக பாதிக்கும் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. மேலும் இது தைராய்டு சுரப்பியில் மோசமான விளைவு ஏற்படுத்துவதாலும், உடலில் ஆற்றலை குறைப்பதாலும், இதை தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க:  Thyroid : தைராய்டு பிரச்சனையா..? அப்ப இந்த 3 பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்கள்..ரொம்பவே நல்லது!

Latest Videos

click me!