
பலரும் காலை எழுந்தவுடன் குடிக்க விரும்ப பானம் டீ, காபி தான். அதுவும் காபிக்கு தனி பட்டாளமே உண்டு. காபிக்கும் அவர்களுக்கும் அப்படி ஒரு பந்தம் என்றே சொல்லலாம். அவர்கள்
காலை எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் தங்களது நாளை தொடங்குவதை வழக்கமாக்கியுள்ளனர். காபி குடிப்பது ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.
அந்த வகையில், பெரும்பாலானோர் காபி குடிக்கும் போது சில உணவுகள் சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இது நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும்.
நிபுணர்கள் கூற்றுப்படி, காபியுடன் சில பொருட்களை சாப்பிட்டால் அது ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை பாதிக்கும் மற்றும் சில உடல் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, காபியையும் சில உணவுப் பொருட்களை ஒன்றாக சாப்பிட்டால் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, காபி குடிக்கும் போது அதனுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் :
1. பால் மற்றும் பிற பால் பொருட்கள் : பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல, பிற பால் பொருட்களும் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் போன்றவற்றிற்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால், இதை நீங்கள் காபியுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதாவது, உடலில் இருக்கும் கால்சியமானது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால் சிறுநீரக கல் பிரச்சனை மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
2. சிவப்பு இறைச்சி : ஆராய்ச்சி படி, காபி குடலில் இருக்கும் ஊட்டச்சத்து உறிஞ்சுகளை பாதிக்கும். அந்த வகையில் சிவப்பு இறைச்சி இரும்பின் சிறந்த ஆதாரமாகும். எனவே, காபி மற்றும் சிறப்பு இறைச்சியை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
3. வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் : வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் ஆரோக்கியமற்றது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. எனவே வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை ஒருபோதும் காபியுடன் குடிக்க கூடாது. இந்த மாதிரியான ஆரோக்கியமற்ற உணவுகளை காபியுடன் சேர்த்து குடித்தால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.
4. தானியங்கள் : சிலர் காலையில் தானியங்களை சாப்பிட விரும்புவதால் அவற்றை காபியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். எனினும், சில தானியங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், அவை துத்தநாகத்தால் செறிவூட்டப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், காபியுடன் தானியங்களை சேர்த்து சாப்பிட்டால் துத்தநாகம் உறிஞ்சுவது தடுக்கப்படும். மேலும் இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும். எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: காபி குடிப்பது நல்லது தான்... ஆனால் அதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா?
5. சிட்ரஸ் பழங்கள் : பலரும் காலை உணவு ஆரஞ்சு திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், இவற்றை நீங்கள் காபி உடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். ஏனெனில், இயற்கையாகவே இவற்றில் அமிலத்தன்மை இருக்கிறது. ஆகவே காபி மற்றும் சிட்ரஸ் பலகை ஒன்றாக சாப்பிட்டால் இரைப்பை உணவுகளை ரிஃப்ளக்ஸ் நோயை உண்டாக்கும். இதனால் குமட்டல், வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: டீ, காபியுடன் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்!!