AC Blast Alert: ஏசி வெடிப்பதற்கு முன் காட்டும் 5 ஆபத்து அறிகுறிகள்! விபத்துகளை தவிர்க்க எளிய வழிகள்!

Published : Jun 12, 2026, 09:30 AM IST

Air Conditioner Safety Tips: சரியான பராமரிப்பு இல்லாதபோது ஏசி இயந்திரம் தீப்பிடிப்பதோ அல்லது வெடிப்பதோ போன்ற விபத்துகள் எதிர்பாராத விதமாக ஏற்படலாம். ஏசி முற்றிலும் பழுதடைவதற்கு முன்பாகவே சில எச்சரிக்கை அறிகுறிகளை காட்டும்.

PREV
17
ஏசி வெடிப்பதற்கான அறிகுறிகள்

கோடை காலம் வந்து விட்டால் வெயிலில் இருந்து தப்பிக்க வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏசியின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாதபோது ஏசி இயந்திரம் தீப்பிடிப்பதோ அல்லது வெடிப்பதோ போன்ற விபத்துகள் எதிர்பாராத விதமாக ஏற்படலாம். ஏசி முற்றிலும் பழுதடைவதற்கு முன்பாகவே சில எச்சரிக்கை அறிகுறிகளை காட்டும். அவற்றைச் சரியான நேரத்தில் கவனித்தால் பெரும் விபத்துகள் ஏற்படமால் தவிர்க்கலாம்.

27
கருகிய வாசனை அல்லது புகை வருதல்

ஏசி ஓடும்போது கொண்டிருக்கும் போது பிளாஸ்டிக் கருகும் வாசனையோ, வயர் கருகும் வாசனையோ அல்லது லேசான புகையோ வந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் ஏசியை அணைக்க வேண்டும். இது வயரிங்கில் ஷார்ட் சர்க்யூட், ஓவர்ஹீட்டிங் அல்லது வேறு ஏதேனும் எலக்ட்ரிக் பழுதாக இருக்கலாம். உடனே டெக்னீஷியனை அழைத்து சரிபார்க்க வேண்டும்.

37
அடிக்கடி MCB ட்ரிப் ஆகுதா?

ஏசியை ஆன் செய்தவுடன் வீட்டின் மெயின் பாக்ஸில் உள்ள MCB அல்லது சர்க்யூட் பிரேக்கர் அடிக்கடி ட்ரிப் ஆனால், அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது ஓவர்லோடு, கம்ப்ரெஸ்ஸர் பழுது அல்லது வயரிங் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இதனை அலட்சியப்படுத்தினால் தீ விபத்து ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

47
ஏசியிலிருந்து வித்தியாசமான சத்தம் வருதா?

ஏசி இயங்கும் போது வழக்கத்திற்கு மாறாக 'கடகட' என்ற சத்தமோ, அதிக அதிர்வோ, உரசும் ஒலியோ கேட்டால் உள்ளே ஏதோ பெரிய பழுது உள்ளது என்று அர்த்தம். ஃபேன் மோட்டார் அல்லது கம்ப்ரெசரின் பாகங்கள் பாகங்களில் பிரச்சனை இருந்தால் இதுபோன்ற சத்தங்கள் ஏற்படும். இதை உடனே சரிசெய்யாவிட்டால், பிரச்சனை பெரிதாகிவிடும்.

57
திடீரென கூலிங் குறைந்துவிட்டதா?

ஏசி ஆன் செய்தும் அறையில் குளிர்ச்சி ஏற்படாமல், அதே நேரத்தில் ஏசி யூனிட் வழக்கத்தை விட அதிக சூடாக இருந்தால் அது கம்ப்ரெசர் அல்லது கேஸ் லீக்கேஜ் கோளாறாக இருக்கலாம். இந்த நிலையில் தொடர்ந்து ஏசியை இயக்கினால் மெஷின் வெடிக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.

67
பிளக் அல்லது வயர் அதிகமாக சூடாகிறதா?

ஏசி இணைக்கப்பட்டுள்ள சுவிட்ச் போர்டு, பிளக் அல்லது சாக்கெட் ஆகியவற்றைத் தொட்டுப் பார்க்கும்போது சுடும் அளவிற்குச் சூடாக இருந்தால், உடனே மெயின் சுவிட்சை ஆஃப் செய்ய வேண்டும். லூஸ் கனெக்ஷன் அல்லது தரமற்ற வயரிங் காரணமாக இருக்கலாம். இதை சரிவர கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய ஆபத்தில் முடியும்.

77
விபத்துகளைத் தவிர்க்கும் எளிய வழிகள்

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏசி பில்டர்களைச் சுத்தம் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறையாவது ஏசியின் வயரிங், கேஸ் அளவு மற்றும் கம்ப்ரெசரின் தரத்தை அங்கீகரிக்கப்பட்ட டெக்னீஷியன் மூலம் பரிசோதிக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏசியை இடைவிடாமல் தொடர்ந்து இயக்காமல் கொஞ்சம் நேரம் ஓய்வு அளிக்க வேண்டும். இதனால் உங்கள் வீடு மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories