100 பேர் இருந்தாலும் நீங்க மட்டும் தனி ஒருவனாக தெரிய 6 அற்புதமான டிப்ஸ்

Published : Jun 11, 2026, 08:15 PM IST

நூறு பேர் இருக்கும் ஒரு கூட்டத்தில் நுழைந்த உடனே, எல்லாரும் சட்டென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டுமா? "யார்டா இவங்க? செம கெத்தா இருக்காங்களே!" என்று மற்றவர்கள் மனதில் வியப்பை ஏற்படுத்த அழகு மட்டுமே போதாது; அதற்கு ஒரு தனி 'ஆட்டிடியூட்'  தேவை.

PREV
16
டாப்-டு-பாட்டம்' கலர் சீக்ரெட்:

விதவிதமான வண்ணங்களில் ஆடைகளை உடுத்தாமல், தலைமுடி முதல் காலணி வரை (Monochromatic look) ஒரே நிறத்திலான ஆடைகளை (உதாரணமாக முழு கருப்பு அல்லது முழு வெள்ளை/ஆலிவ் கிரீன்) தேர்ந்தெடுங்கள். மனித கண்கள் பொதுவாக பல வண்ணங்களுக்கு நடுவில் இருக்கும் ஒரு ஒற்றை நிற வடிவத்தைத்தான் முதலில் உற்றுநோக்கும். இது உங்களை உடனே கம்பீரமாகக் காட்டும்.

26
'சத்தத்தை' குறையுங்க:

கூட்டத்தில் கவனத்தை ஈர்க்கிறேன் என்று கத்திப் பேசுவதோ, கைகளை வேகமாக ஆட்டுவதோ கூடாது. மிகவும் நிதானமாக, புன்னகையோடு, மெதுவான குரலில் ஆனால் ஆணித்தரமாகப் பேசுங்கள். எல்லாரும் சத்தம்போடும் இடத்தில், அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பவர்கள் தான் 'பவர்ஃபுல்' மனிதர்களாகக் கருதப்படுவார்கள். உங்கள் அமைதியே உங்களைத் தனித்துக் காட்டும்.

36
கைகளைக் கட்டாதீங்க:

கூட்டத்தில் நிற்கும் போது கைகளைக் கட்டிக்கொண்டோ, பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டோ, மொபைலைப் பார்த்துக் கொண்டோ நிற்காதீர்கள். நிமிர்ந்த தோள்களுடன், கைகளை ஃப்ரீயாக விட்டு நில்லுங்கள். கைகளைக் கட்டாமல் இருப்பது நீங்கள் "எதையும் எதிர்கொள்ளத் தயார், நான் பயப்படவில்லை" என்பதை மற்றவர்களின் ஆழ்மனதிற்கு உணர்த்தும். உங்களை அறியாமலேயே ஒரு தலைவனுக்கான (Leader) லுக் உங்களுக்குக் கிடைக்கும்.

46
3-செகண்ட் ரூல்:

கூட்டத்தில் உங்களை யாராவது பார்க்கும் போது, பதற்றத்தில் பார்வையைத் திருப்பிக் கொள்ளாதீர்கள். அவர்களைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து, ஒரு 3 வினாடிகள் கண்களை நேராகப் பார்த்து விட்டுப் பிறகு பார்வையை மாற்றுங்கள். இந்த '3-செகண்ட் ரூல்' உங்களின் அசாத்தியமான தன்னம்பிக்கையைக் காட்டும். அடுத்த நொடியே அவர்கள் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துவிடுவீர்கள்.

56
'சிக்னேச்சர் வாசனை':

கடைகளில் விற்கும் சாதாரண சென்ட்களைத் தவிர்த்து, உங்களுக்கென்று ஒரு தனித்துவமான, மைல்டான வாசனைத் திரவியத்தைப் (Perfume) பயன்படுத்துங்கள். அது உங்கள் அடையாளமாக மாற வேண்டும். மனித மூளை உருவங்களை மறந்தாலும் வாசனைகளை எளிதில் மறக்காது. கூட்டத்தில் உங்களைப் பார்ப்பதற்கு முன்பே, அந்த வாசனை உங்களின் வருகையை மற்றவர்களுக்கு கம்பீரமாக அறிவித்துவிடும்!

66
எல்லாரையும் கவர ஒரே ஒரு 'மாஸ்' டிப்:

கூட்டத்தில் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற பயத்தை முதலில் தூக்கிப் போடுங்கள். "இந்தக் கூட்டத்திலேயே நான்தான் பெஸ்ட்" என்ற எண்ணத்தோடு (Self-worth) உங்கள் முகத்தில் ஒரு குட்டிப் புன்னகையை மட்டும் தக்க வையுங்கள். அந்தப் பொலிவுக்கு முன்னால் எந்த மேக்கப்பும் ஈடாகாது!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories