ஆண்மையை அதிகரிக்கும் கீரைகள்... என்னென்னன்னு ‘ஆண்களே’ தெரிஞ்சிக்கோங்க...!

First Published Nov 11, 2020, 9:23 PM IST

நவீன உலகில் பிரச்சனைகளை நம்ம தேடிப்போகவே வேண்டாம். அதுவே நம்மைத் தேடி வந்துவிடும். வேலை வேலை என ஓடும் பல ஆண்களும் தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாதது, மன அழுத்தம், உடற் பயிற்சியின்மை என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பலரது தாம்பத்ய வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அதை சரி செய்ய அசத்தலான 5 கீரை வகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க... 
 

நறுந்தாளி நன்முருங்கை தூதுவளை பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின்வாங்கி கேள் என சித்தர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகள் எல்லாமே கீரை வகைகளை தான் குறிக்கிறது.
undefined
தாளிக்கீரை என்பது வேலிகள், சிறு காடுகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் கொடியின் இனம். உடல் கொதிப்பு, எரிச்சலை போக்கும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது. இதில், இலை மட்டும் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
தாளிக்கீரையின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் பளபளப்படையும், உடல் அரிப்பு தோல் வியாதிகள் நீங்கும். சிறுநீரக பாதையில் தொற்று, வாய் மற்றும் வயிற்றுப்புண்ணுக்கும் சிறந்த மருந்தாகும் .
undefined
நன் முருங்கை என்பது முருங்கை கீரையை குறிக்கிறது. இப்போது வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் இல்லாவிட்டாலும் கடைகளில் கட்டு 10 ரூபாய்க்காவது கிடைக்கிறது. உடனே அதை வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
undefined
அடுத்ததாக தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை இந்த 3 கீரைகளுமே நமக்கு நாள்தோறும் சுலபமாக கிடைக்க கூடியவையே.
undefined
இந்த 5 கீரைகளையும் பசு நெய்யில் சமைத்து உண்டு வந்தால் விந்தணு குறைபாடுகளை நீக்கி, காமம் பெருக்கும் வல்லமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!