1. கனமான உணவுக்கு முன் லேசான உணவு:
அதிகமான உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக கொஞ்சமாக நார்ச்சத்துள்ள காய்கறிகள், ஒரு கப் சூப் அல்லது சாலட் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தயார்படுத்த உதவும். இது செரிமான என்சைம்களைத் தூண்டுவதோடு, பின்னர் அவசர அவசரமாக அதிகக் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டுவிடாமல் தடுக்கவும் செய்கிறது.
2. நிதானமாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்:
உணவை மெதுவாகச் சாப்பிடுவதே உப்பசத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த வழி. உணவை நன்கு மெல்லும்போது அது சிறிய துகள்களாக உடைந்து, செரிமான என்சைம்கள் எளிதாக வேலை செய்ய உதவுகிறது. மேலும் மெதுவாகச் சாப்பிடும் போது தேவையற்ற காற்று வயிற்றுக்குள் போவது குறைந்து, கேஸ் உருவாவதும் நிற்கும்.
3. சாப்பிடும்போது சோடா, சாஃப்ட் டிரிங்க் தவிர்த்திடுங்கள்:
கார்பனேட்டட் பானங்கள் (சோடா, கூல்டிரிங்க்ஸ்) நேரடியாக குடலில் அதிக வாயுவைச் சேர்க்கும். இது உப்பசத்தை இன்னும் மோசமாக்கும். எனவே சாப்பிடும்போது சோடா குடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை மட்டும் உறிஞ்சி குடிப்பது நல்லது.
4. சாப்பிட்டதும் லேசாக நடைப்பயிற்சி செய்யுங்கள்:
கனமான உணவை முடித்த பிறகு உடனே படுக்காமல் அல்லது உட்காராமல், ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை விரைவுபடுத்தும். இந்த லேசான அசைவு குடல் இயக்கத்தைத் தூண்டி, உணவு எளிதாக நகர உதவுவதோடு வாயு தேங்குவதையும் குறைக்கும்.