15 ஆண்டுகளாக ஒரே காலை உணவு! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் எளிய காலை உணவு பழக்கம், விருப்பமான இந்திய உணவுகள் மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளை (Google) வழிநடத்தி வரும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, மிக எளிய உணவுப் பழக்கத்தைக் கொண்டவராக விளங்குகிறார். கடந்த 15 ஆண்டுகளாகத் தனது காலை உணவில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணவையே அவர் தொடர்ந்து உட்கொண்டு வருகிறார். இந்த எளிய உணவுப் பழக்கம் காலையில் என்ன சாப்பிட வேண்டும் என முடிவெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி, அன்றைய நாளின் முக்கியப் பணிகளில் முழு கவனம் செலுத்த அவருக்கு உதவுகிறது. அதே நேரத்தில், இந்திய உணவுகள் மீதான தனது பிரியம் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
24
15 ஆண்டுகளாக மாறாத சுந்தர் பிச்சையின் காலை உணவு
'மின்ட்' (Mint) ஊடகத்திற்கு அளித்த தகவலின்படி, சுந்தர் பிச்சை தினமும் காலையில் கிட்டத்தட்ட ஒரே உணவையே சாப்பிடுகிறார். அவரது காலை உணவுத் தட்டில் முட்டை மற்றும் டோஸ்ட் (Eggs and Toast) இடம்பெற்றிருக்கும்; அத்துடன் ஒரு கப் சுடச்சுட தேநீரும் (Chai) இருக்கும். தினமும் என்ன சாப்பிடலாம் என்று யோசித்து முடிவெடுக்கும் நேரத்தை இந்த வழக்கம் கணிசமாகக் குறைத்து, பிற முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த அவருக்கு வழிவகுக்கிறது.
அதேபோல், அமைதியான காலைப் பொழுதை அவர் மிகவும் விரும்புகிறார். சிந்தனைகளை ஒருங்கிணைக்கவும், நடப்புச் செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் இக்கால நேரமே பயனுள்ளதாக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். குறிப்பாக, 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (The Wall Street Journal) உள்ளிட்ட முக்கிய நாளிதழ்களை வாசிப்பது அவரது காலை வழக்கத்தில் இன்றியமையாத அங்கமாகும்.
34
சுந்தர் பிச்சையின் ஃபேவரிட் மெனுவில் இருக்கும் உணவுகள்?
வழக்கமாகக் காலை 6:45 மணி முதல் 7:30 மணிக்குள் கண்விழிக்கும் சுந்தர் பிச்சை, இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதாகவும், இரவு 10 மணிக்குப் பிறகே தனது வேலைகளில் கூடுதல் சுறுசுறுப்புடன் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தினமும் குறைந்தபட்சம் 6.5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை உறங்குவதை அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.
கடுமையான பணிச் சுமைக்கு மத்தியிலும் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை சுந்தர் பிச்சை தவறாமல் ஒதுக்குகிறார். வார இறுதி நாட்களில் முறையாக உடற்பயிற்சி செய்வதாகவும், நடைப்பயிற்சி மற்றும் மலையேற்றம் (Walking & Hiking) மேற்கொள்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலை நாட்களைப் பொறுத்தவரை, வெள்ளிக்கிழமை மாலையில் பிரத்யேகமாக உடற்பயிற்சி செய்கிறார். திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சிகளை இணைத்துக்கொள்கிறார். தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்வதை அவர் விரும்புவதில்லை. அன்றைய மனநிலைக்கு ஏற்ப சைக்கிள் ஓட்டுவது (Bike session) அல்லது வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.