சிக்கன், மீன் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், அவற்றால் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், அசைவு உணவுகள் சமைத்து சாப்பிட்டு அந்த பாத்திரத்தை கழுவி பிறகும் சில சமயங்களில் அதிலிருந்து வாடை அடைக்கும். நீங்களும் அசைவம் சமைத்த பிறகு இதே பிரச்சினையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அசைவம் சமைத்த பாத்திரம் இனி துர்நாற்றம் அடிக்காது. அது என்ன என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
27
காபித்தூள்
அசைவம் சமைத்து கழுவிய பாத்திரத்தில் 1-2 ஸ்பூன் காப்பித்தூளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பிறகு 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பின் எப்போதும் போல சோப்பு போட்டு கழுவினால் வாடை அடிக்காது.
37
எலுமிச்சை சாறு
எலுமிச்சை பழம் சமையலுக்கு மட்டுமல்ல சுத்தம் செய்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் அமலம் துர்நாற்றத்தை எளிதாக நீக்க உதவுகிறது. எனவே, அசைவம் சமைத்த பாத்திரங்களில் இருந்து வாடை அடிக்கிறது என்றால் அதை போக்க பாத்திரத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு பாத்திரம் கழுவும் ஸ்க்ரப் கொண்டு பாத்திரத்தை நன்றாக தேய்த்தால் போதும் துர்நாற்றம் அடிக்காது.
உருளைக்கிழங்கு சமையலுக்கு மட்டுமல்ல, துர்நாற்றத்தை நீக்கவும் உதவுகிறது. எனவே, இரண்டு துண்டாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு சிறிதளவு உப்பு மற்றும் பாத்திரம் கழுவும் லிக்விட் சேர்த்து அசைவம் சமைத்த பாத்திரத்தில் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் பாத்திரத்தில் கவிச்ச வாடை அடிக்காது.
57
இலவங்கப்பட்டை தூள்
இலவங்கப்பட்டை பல அற்புதங்களையும் செய்யும். இது பாத்திரங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தை எளிதாக நீக்க உதவுகிறது. இதற்கு அதனுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சுமார் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு எப்போதும் போல பாத்திரத்தை சோப்பு போட்டு கழுவினால் மணம் வீசும். பளபளப்பாகவும் இருக்கும்.
67
வினிகர்
அசைவம் சமைத்த பாத்திரத்தில் கவிச்சை வாடையை போக்க வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு கப் வினிகரை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் பாத்திரத்தில் அடிக்கும் வாடை நீங்கிவிடும்.
77
பேக்கிங் சோடா
அசைவம் சமைத்த பாத்திரத்தில் இருந்து வரும் வாடகை போக்க பேக்கிங் சோடா பெஸ்ட் சாய்ஸ். இதற்கு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 5 ஸ்பூன் வினிகர் கலந்து ஒரு எலுமிச்சை உதவியுடன் பாத்திரத்தை கழுவினால் வாடை நீங்கிவிடும்.