மாம்பழம் பழுக்க வைக்கும் டிப்ஸ்: கடைகளில் கார்பைடு வைத்து பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களால் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம்.2 நாட்களில் வீட்டிலேயே இனிப்பான மாம்பழங்களை பழுக்க வைக்கலாம். முற்றிலும் இயற்கையான சுவை. மேலும் அறிய முழு கட்டுரையையும் படியுங்கள்.
இயற்கையாக மாம்பழம் பழுக்க வைப்பது எப்படி? கெமிக்கல் இல்லாத இனிப்பான மாம்பழங்களுக்கு இந்த எளிய வீட்டுக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.
சந்தையில் விற்கப்படும் கார்பைடு மாம்பழங்களைத் தவிர்த்து, வீட்டிலேயே மாங்காய்களை இயற்கையாகப் பழுக்க வைக்கலாம். இதற்கு உங்களுக்கு தேவையானது செய்தித்தாள் மற்றும் அரிசி டிரம் மட்டுமே.
25
செய்தித்தாளில் மாங்காய்களைச் சுற்றுவதன் ரகசியம்! இது மாங்காயிலிருந்து வெளியாகும் எத்திலீன் வாயுவைத் தடுத்து, இயற்கையாக பழுக்க உதவுகிறது.
ஒவ்வொரு மாங்காயையும் தனித்தனியாக செய்தித்தாளில் சுற்ற வேண்டும். இது மாம்பழம் சீராகவும், இயற்கையாகவும் பழுக்க உதவும் ஒரு முக்கியமான படியாகும். ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
35
அரிசி டிரம் அல்லது துணிப் பையில் மாம்பழம் பழுக்க வைக்கும் முறை! இது தேவையான வெப்பத்தை அளித்து, இரண்டு நாட்களில் மாம்பழத்தை மென்மையாக்கும்.
செய்தித்தாளில் சுற்றிய மாங்காய்களை அரிசி டிரம் அல்லது ஒரு பெரிய துணிப் பையில் வைத்து, சூடான இடத்தில் வைக்கவும். இது மாம்பழம் விரைவாக பழுக்க உதவும். ஆமாங்க இரண்டே நாட்களில் பச்சை மாங்காய் பொன்னிறமாக பழுத்து உங்களை சந்தோஷப்படுத்தும்.
வீட்டிலேயே பழுக்க வைத்த இனிப்பான, சுவையான மாம்பழங்கள்! ரசாயனங்கள் இல்லாமல், மரத்தில் பழுத்தது போன்ற இயற்கையான சுவையை அனுபவியுங்கள்.
இரண்டே நாட்களில், உங்கள் மாங்காய்கள் மென்மையாகவும், நல்ல நறுமணத்துடனும் பழுத்துவிடும். இதன் சுவை கடையில் வாங்கும் மாம்பழங்களை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும். இதனால் யாருக்கும் உடல் நல பிரச்சினைகள் ஏற்படாது.
55
மாம்பழம் பழுக்க வைக்கும்போது இந்த தவறுகளைத் தவிர்க்கவும்! கார்பைடு, சுண்ணாம்பு மற்றும் நேரடி வெயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கார்பைடு பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைப்பது உடல்நலத்திற்கு ஆபத்தானது. இது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல், மாம்பழங்களை நேரடியாக கடும் வெயிலில் வைப்பதும் சீரான பழுக்குதலைத் தராது. எனவே, வைக்கோல், காகிதம் போன்ற இயற்கை முறைகளைப் பயன்படுத்தி மாம்பழங்களை பாதுகாப்பாகப் பழுக்க வைப்பது சிறந்தது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.