ராத்திரி நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ்

Published : Apr 26, 2026, 02:44 PM IST

தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அளவுக்கு மீறினால் தூக்கத் தரத்தை பாதிக்கக்கூடும்.

PREV
15
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடித்தல்

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடித்திருந்தாலும், தூங்கச் செல்லும் முன் மேலும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது பலரின் பழக்கமாக உள்ளது. உடல் நீர்ச்சத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இதற்குக் காரணம். ஆனால், இந்த பழக்கம் சில நேரங்களில் தூக்கத் தரத்தையே பாதிக்கக்கூடும். அதேவேளை, இரவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீர்வறட்சியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, இரவு நேர நீர் அருந்தலில் சமநிலை அவசியமாகிறது.

25
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது

அனைவருக்கும் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் இல்லை. குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவிடுபவர்கள், நாள்பகலில் போதுமான தண்ணீர் எடுத்திருந்தால், கூடுதலாக இரவில் குடிக்கத் தேவையில்லை. ஆனால், வெப்பத்தில் அதிகமாக உழைத்தவர்கள், வாயில் உலர்ச்சி, தலைவலி போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அது நீர்வறட்சியின் சுட்டுக்காட்டாக இருக்கலாம். அத்தகைய சூழலில், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும்.

35
தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற சிறந்த நேரம்

தண்ணீர் குடிக்கும் நேரமும் முறையும் முக்கியம். தூங்கச் செல்லும் நேரத்திற்கு மிக அருகில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்; குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பே குடித்து முடித்தால் சிறுநீரகத்திற்கு செயல்பட போதிய நேரம் கிடைக்கும். மேலும், ஒரே நேரத்தில் அதிக அளவு குடிப்பதைவிட, சிறிய அளவுகளில் மெதுவாக அருந்துவது உடலுக்கு ஏற்றதாகும். மிக குளிர்ந்த தண்ணீரை விட, அறை வெப்பநிலையிலோ அல்லது மிதமான சூட்டிலோ உள்ள தண்ணீரே செரிமானத்துக்கும் தூக்கத்திற்கும் உதவியாக இருக்கும்.

45
இரவில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது இரவில் ‘நாக்டூரியா’ எனப்படும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை உருவாக்கும். இதனால் ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்பட்டு, காலையில் சோர்வு அதிகரிக்கும். மேலும், இதயம் மற்றும் சிறுநீரகத்தின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் ரத்தத்தில் சோடியம் குறையும் ‘ஹைப்போநெட்ரீமியா’ போன்ற பிரச்சனைகளும் உருவாகும். இது தலைசுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

55
இரவில் நீர்ச்சத்துடன் இருப்பதன் நன்மைகள்

இதய நோய், சிறுநீரக குறைபாடு, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவில் தண்ணீர் அருந்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினசரி பழக்கத்தில், இரவு உணவை முன்னதாக முடித்தல், கஃபீன் பானங்களைத் தவிர்த்தல், மற்றும் தூங்குவதற்கு முன் குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அருந்துதல் ஆகியவை நல்ல தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் உதவும். உடல் தரும் சிக்னல்களை கவனித்து, தேவைக்கேற்ப தண்ணீர் குடிப்பதே சிறந்த நடைமுறையாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories