Curry leaf tea: தினமும் 1 கப் கறிவேப்பிலை டீ குடித்து பாருங்கள்...இது தெரிஞ்சா இனி மிஸ் பண்ண மாட்டீங்க!

First Published Sep 30, 2022, 1:13 PM IST

Curry leaf tea: நம்முடைய அன்றாட உணவில் கட்டாயம் கறிவேப்பிலையை ஏதாவது ஒரு வழியில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

தென்னிந்தியாவில் அன்றாடசமையலுக்கு தாளிக்கும் போது கறிவேப்பிலை பயன்படுத்துவது உண்டு. இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும். இந்த கருவேப்பிலையை சாதாரணமாக சமைத்துக் கொடுத்தால், சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை, ஒதுக்கி வைப்பது உண்டு. 

அதற்கு பதிலாக இது போல்  கறிவேப்பிலை டீ போட்டு குடித்தால், அதில் இருக்கும் சத்துக்கள் நமக்குக் கிடைக்கும்.ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர். ஆம், முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம். எனவே, கறிவேப்பிலை டீயை எப்படி தயாரிப்பது, அதன் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கறிவேப்பிலை டீ தயாரிப்பது எப்படி? 

முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கறிவேப்பிலையில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி,  மூடி அரை மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 

முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கறிவேப்பிலை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கறிவேப்பிலை டீ குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். 

கறிவேப்பிலை டீயில் பீட்டா கரோட்டீன் மற்றும் புரோட்டீன் உள்ளது. இது  பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்வு, போன்ற பிரச்சனைகளுக்கு  பலன் தருகிறது. 

கறிவேப்பிலையில் மலமிளக்கி பண்புகள் உள்ளதால், இது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைப் போக்கி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள் கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், வாந்தி, குமட்டல் மற்றும் காலைச் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரின் அனுமதியைப்  ஒருமுறை பெற்றுக் கொள்ளுங்கள்.

click me!