பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படுமா.? இதற்கு பரிகாரம் தேவையா? ஆன்மீக ரீதியாக என்ன கூற்று தெரியுமா..?

First Published Sep 30, 2022, 10:16 AM IST

Vastu tips for home: பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உணமையா..? அதற்கான விளக்கத்தை ஆன்மீக ரீதியாக இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.

Vastu tips for home:

நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக, பாம்பை அடிப்பவர்களுக்கு, சர்ப்ப தோஷம் ஏற்படும் என்று கூறுவது உண்டு. சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும். ஆனால், ஒரு சிலர் பாம்பை பார்த்து கூட இருக்க மாட்டார்கள் அவர்களுக்கும் சர்ப்ப தோஷம் ஏற்படும். இது எதனால் என்று என்றாவது நீங்கள் சிந்தித்து உண்டா..? இதற்கு உங்களின் முன்னோர்கள் செய்த பாவம் காரணமாக கூறப்படுகிறது. எனவே, பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது பற்றி தவறான கூற்றாகும்.

 மேலும் படிக்க...கிச்சன் சிங்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா..? இந்த ஒரு திரவம் ஊற்றினால் போதும், அடைப்பு நொடியில் நீங்கும்

Vastu tips for home:

எனவே, இது போன்ற அரிய ஆன்மீக தகவல்களை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம். ராகு, கேது தோஷம் ஏற்படுபவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக செய்த பாவங்களும் பின் தொடர்வதாக நம்பப்படுகிறது. எனவே, ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களை வணங்குவது உங்களை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். அதேபோன்று, தீயை அல்லது தீப்பிடித்துள்ள பொருட்களை கீழே தரையில் போட்டு மிதிக்க கூடாது. இவ்வாறு போட்டு மிதிப்பதால் பூமி தோஷம் ஏற்படுகிறது.

 மேலும் படிக்க...கிச்சன் சிங்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா..? இந்த ஒரு திரவம் ஊற்றினால் போதும், அடைப்பு நொடியில் நீங்கும்

Vastu tips for home:

பூமாதேவியின் சாபத்தை பெற்ற ஒருவருக்கு என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், பணம் கையில் தங்கவே தங்காது அவர்களுக்கு மனை தோஷம் உண்டாகிறது. இதனால் சொந்த வீடு கட்டுவதில் காலதாமதம் ஏற்படும். இன்னும் சிலருக்கு வாழ்வின் இறுதி வரை அந்த பாக்கியமே கிடைக்காமல் போக கூட வாய்ப்பு உண்டு. 

Vastu tips for home:

அதேபோன்று, ஒருவர் வாழும் காலத்தில் நல்லது செய்வது, தன்னுடைய சந்ததிகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். ஏனெனில், அவர் செய்யும் தவறு அவரையும், அவர்களுடைய சந்ததியையும் சேர்த்து பாதிக்கிறது. இவை ராகு, கேது ஆகிய இரண்டு நிழல் கிரகங்களிடம் 33 ஆண்டுகள் சிக்கி பின்னர் தோஷத்தின் பலன்களை அனுபவித்து பின்னர் நிவர்த்தியாகும் என்கிறது. எனவே, முடிந்தவரை நாம் பிறருக்கு பாவம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது.

 மேலும் படிக்க...கிச்சன் சிங்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறதா..? இந்த ஒரு திரவம் ஊற்றினால் போதும், அடைப்பு நொடியில் நீங்கும்

click me!