Side effect of eating peanuts: வேர்க்கடலையில் இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கா..? யாரெல்லாம் சாப்பிட கூடாது..

First Published Sep 30, 2022, 8:07 AM IST

Side effect of eating peanuts: வேர்க்கடலை சாப்பிடுவது, உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், ஒரு சில உடல் உபாதைகள் இருப்பவர்கள்  வேர்க்கடலை எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும், வேர்க்கடலையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆம், இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நீரழிவு நோயாளிகளுக்கு, இதய பாதிப்பு இருப்பவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும், இது உடலில்   நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில்  சிலரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு தொழில் நஷ்டம், மகரம் ராசிக்கு செல்வம், உங்கள் ராசிக்கு என்ன பலன்

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள்:

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், வேர்க்கடலையில் உள்ள பொருட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு அஜீரணம் ஏற்படும்.

ஒவ்வாமை பிரச்சனை:

ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் வேர்க்கடலையை உட்கொள்வதை தவிர்க்கவும். அலர்ஜி காரணமாக ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள்  சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தோல் அரிப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வாமை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


 தைராய்டுக்கு தீங்கு விளைவிக்கும்: 

 ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை இருப்பவர்கள் வேர்க்கடலை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஏனெனில், வேர்க்கடலை சாப்பிடுவது தைரோட்ரோபின் (தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன்) அளவை அதிகரிக்கிறது. எனவே,  ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் குறைந்த அளவில் மட்டுமே வேர்க்கடலை சாப்பிட வேண்டும்.
 மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு தொழில் நஷ்டம், மகரம் ராசிக்கு செல்வம், உங்கள் ராசிக்கு என்ன பலன்

 எடையை அதிகரிக்கிறது: 
 
வேர்க்கடலை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டது. இதை சாப்பிடுவது ஆரோக்கியமானது, ஆனால் இது கொழுப்பு சத்தை அதிகரித்து உடல் எடையை கூட்டுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள்  வேர்க்கடலை சாப்பிடும் பழக்கம் இருந்தால் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு தொழில் நஷ்டம், மகரம் ராசிக்கு செல்வம், உங்கள் ராசிக்கு என்ன பலன்

click me!