அப்படி, நாம் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அவற்றில் எவ்வளவு கெமிக்கல் கலந்து இருக்கும் என்பதை பற்றி யாரும் சிந்திப்பதே கிடையாது. அதை தினமும் பயன்படுத்தும் போது நம் தலை முடி உதிரத்தானே செய்யும். இப்படி நாம் தொடர்ந்து ஷாம்பு போடுவதால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
அதே போல் தலை குளிக்கும் முன்பு தலை முடியை நன்றாக சிக்கெடுத்த பிறகு தான் தலை குளிக்க வேண்டும். நாம் அப்படியே தலைக்கு குளிப்பதால் சிக்கு இருக்கும் இடத்தில் உள்ள முடிகள் கொத்தாக வந்து விடும்.
மேலும், தினமும் ஷாம்பு போட்டு குளிக்கும் போது நம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நாமே எடுத்து விடுகிறோம். எனவே, வாரத்துக்கு இரண்டு நாள் ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது. மற்ற நாட்களில் கண்டிஷனர் அல்லது சீயக்காய் போட்டு குளிப்பது நல்லது. இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டு உங்களின் முடி உதிர்வை கட்டுப்படுத்துங்கள்.