Surya Grahan 2022- Solar Eclipse on October 24: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அன்றைய தினம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.
சூரிய கிரகணம் அக்டோபர் 2022: சூரிய கிரகணம் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டாவது அதாவது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி மதியம் 2:29 மணிக்கு தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.
25
solar eclipse 2022 -Surya Grahan 2022
இதற்கு மறுநாள் சூரிய கிரகணம் வருவது மிகவும் விசேஷமாக இருக்கும். இருப்பினும் இந்த சூரிய கிரகணத்தை நாம் பார்க்க முடியாது. இந்த கிரகணத்தின் போது, சூரியன் துலாம் ராசியில் இருக்கும். இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அன்றைய தினம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.
சூரிய கிரகணத்தின் போது இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த நேரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதித்துறை தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், அது பின்னர் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். எப்பொழுதும் எதையாவது நினைத்து பயப்படுவார்கள். மன உளைச்சல் நோய் உங்களை சூழ்ந்து கொள்ளும். மன உளைச்சல் நோய் உங்களை சூழ்ந்து கொள்ளும்.
55
Surya Grahan 2022
மிதுனம்:
கிரகணத்தின் போது எந்த ஒரு முக்கிய வேலையும் தடைபடலாம். திருமண உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டு பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பரம் குறைத்து கொள்வது நல்லது, இது உங்கள் வீட்டின் பட்ஜெட்டை கெடுக்கும். உங்கள் வணிக ஒப்பந்தங்களில் ஒன்று திடீரென ரத்து செய்யப்படலாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் சாப்பிட வேண்டாம்.