இந்தியர்கள் பலரும் காலை எழுந்தவுடன் குடிக்க விரும்புவது ஒரு கப் டீ தான். இது அவர்களுக்கு காதல் போன்றது. இன்னும் சிலருக்கோ இது ஒரு ஆற்றல் பானம், மற்றவர்களுக்கோ இது ஒரு இனிமையான தொல்லையாகும். சோர்வை போக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் ஒரு கப் டீ போதும்.
25
Tea and Weight Gain In Tamil
இத்தகைய சூழ்நிலையில் தினமும் டீ குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுகுறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில், டீ-யில் உடல் எடையை அதிகரிப்பதற்கு என ஏதுமில்லை. ஆனால் டீயை நீங்கள் எப்படி குடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது அமையும். மேலும் டீ எடையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இது பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
டீயில் கொழுப்பு செல்களை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் சில உள்ளன. இது தவிர அதில் அதிகளவு காஃபினும் உள்ளது. இது உங்களுக்கு ஆற்றலை அதிகரிக்க உதவும். மேலும் டீயில் இருக்கும் சேர்மங்கள் குடலால் உறிஞ்சப்படும் கொழுப்பின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது தவிர அதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தவறான வழியில் டீ குடித்தால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
- டீயில் சர்க்கரை சேர்க்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல் எடை அதிகரிப்பதற்கு வழி வகுக்கும்.
- அதுபோல சிலர் பிஸ்கட், ஸ்நாக்ஸ் இல்லாமல் டீ குடிக்க மாட்டார்கள் ஆனால் இப்படி குடிப்பது உடல் எடை கூடும்.
- சாப்பிட்ட பிறகு டீ குடித்தால் கலோரிகளின் நுகர்வு அதிகரித்து ஊட்டச்சத்து உறிஞ்சுவது குறையும். இதனால் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
55
Tea and Weight Gain In Tamil
டீயை எப்படி குடித்தால் எடை அதிகரிக்காது?
நீங்கள் டீ போடும்போது அதில் கிராம்பு, ஏலக்காய், துளசி அல்லது அதிமதுரம் ஆகியவற்றை சேர்க்கலாம். இந்த மசாலாக்கள் அனைத்தும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். அதுமட்டுமின்றி நீங்கள் குறைந்த கொழுப்புள்ள பாலில் டீ குடித்தால் உடல் எடை அதிகரிக்காது. உங்களால் டீ குடிப்பதை நிறுத்த முடியவில்லை என்றால் குறைந்த சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். முக்கியமாக நீங்கள் பால் டீட குடிக்க விரும்பினால் அதை தயாரிக்கும் போது அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். இல்லையெனில் அதில் கொழுப்பு அதிகரிக்கும்.