Smartphone Addiction side effects: காலை எழுந்தவுடன் முதல் வேலையாக மொபைல் பார்ப்பவரா நீங்கள்..? அப்படினா இந்த செய்தி உங்களுத்தான்..இதனை கட்டாயம் படித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
இன்றைய நவீன உலகில் செல்ஃபோன் பயன்படுத்தாத மனிதர்கள் குறைவாக உள்ளது. அதேபோன்று, செல்ஃபோன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்ஃபோன், மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.
பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது செல்ஃபோன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல், தேவைற்ற செயல்களில் செல்ஃபோன்களைப் அதிகப்படியாகப் பயன்படுத்துவது, சில விசித்திரமான உடல் பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவோர் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
35
Smartphone Addiction side effects
காலை எழுத்தவுடம் மொபைல் பார்க்கும் பழக்கம் நமது மன அழுத்தத்தை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவில் வரும் மெசேஜ்கள், தவற விட்ட செய்திகள் போன்றவற்றை மொத்தமாக படிக்கும் போது அது உங்களுக்கு தேவையற்ற மன பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் அன்றைய நாள் முழுவதிலும், நாம் ஒரு வித மன அழுத்தத்திலேயே இருக்க நேரிடுகிறதாம்.
காலை எழுந்தவுடன் செல்ஃபோனில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச் சூட்டை உண்டாக்கும். அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றைப் பாதிக்கும். அது நாள் முழுவதும், ஒருவித மன அழுத்தமும் உண்டாகும்.
55
Smartphone Addiction side effects
காலை எழுந்தவுடன் நீண்ட நேரமாக செல்ஃபோனில் மெசேஜ் டைப் செய்பவர்களுக்கு, கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். இது, கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுத்தர மற்றும் மோதிர விரலின் பாதியில் வலி, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.