Parenting Tips : குழந்தைகளுக்கு பால் ஊட்டிய பின் கொடுக்கக் கூடாத உணவுகள்!!

Published : Jul 15, 2025, 07:40 PM IST

குழந்தைகள் பால் குடித்த பிறகு அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கக் கூடாது என்று ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

PREV
16
Foods to Avoid After Drinking Milk for Kids

பால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. பாலில் உடலுக்கு தேவையான கால்சியம், வைட்டமின்கள், புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகளை வலிமையாக்குவது மட்டுமல்லாமல், பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி வெளிப்படுத்துவதிலும் பால் முக்கிய பங்களிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் கொடுத்த பிறகு சில உணவுகளை தெரிந்தோ தெரியாமலோ கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தான் மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? குறிப்பாக அவர்களது செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை படிக்கும் போது உங்களுக்கு இந்த பிரச்சனை சிறியதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். எனவே குழந்தைகள் பால் குடித்த பிறகு எந்த மாதிரியான உணவுகளை பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்றும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

26
காரமான மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் :

பொதுவாக குழந்தைகள் தின்பண்டங்களை சாப்பிட அதிகம் விரும்புவார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பால் குடிக்கும் முன்போ அல்லது பின்பு காரமான அல்லது உப்பு நிறைந்த தின்பண்டங்களை அவர்களுக்கு கொடுப்பார்கள். ஆனால் அப்படி கொடுப்பது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவை செரிமான செயல்முறையை மெதுவாக்கி அஜீரணம், வாயு, வாந்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

36
புளிப்பு பழங்கள்

குழந்தைகளுக்கு பால் கொடுத்த பிறகு உடனே ஆரஞ்சு திராட்சை போன்ற புளிப்பு நிறைந்த பழங்களை சாப்பிட கொடுக்கக் கூடாது ஏனெனில் அவற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளதால் அவை பாலில் இருக்கும் புரதத்துடன் இனிது செரிமானத்தில் தலையிடும் இதன் விளைவாக வீக்கம், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போகும்

46
தர்பூசணி வேண்டாம்!

தர்பூசணி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் 90 சதவீதம் நீரால் நிறைந்துள்ளது. பால் குடித்த உடனே தர்பூசணி சாப்பிட்டால் செரிமான அமைப்பில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தர்பூசணியில் இருக்கும் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக பால் எளிதில் ஜீரணமாகாது. இதன் விளைவாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

56
அசைவம் கொடுக்காதே!

பால் குடிக்கும் முன்போ அல்லது பின்போ அசைவ சாப்பிடும் பழக்கம் பலரிடம் இருக்கும். இந்த பழக்கத்தை குழந்தைகளிடம் செய்து விடக்கூடாது. அது அவர்களது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் பால் மற்றும் இறைச்சியின் செரிமான செயல்முறையானது வெவ்வேறு. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் உடலில் நச்சுக்கள் உருவாகும். மேலும் சரும பிரச்சனை, அஜீரணம், மலச்சிக்கல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

66
நினைவில் கொள் :

குழந்தைகள் பால் குடித்த பிறகு குறைந்தது அரை மணி நேரம் எந்தவிதமான உணவுகளையும் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் அதை எளிதில் ஜீரணிக்க கூடியதாக இருக்க வேண்டும். இல்லையெனில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை அது தடுக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories