Cancer : உஷாராக இருங்கள்.. நாம் தினமும் பயன்படுத்தும் இந்த 6 பொருட்கள் கேன்சரை உண்டாக்குமாம்.!

Published : Jul 15, 2025, 04:28 PM IST

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்கள் புற்றுநோயை வரவழைக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
17
6 household items can cause cancer

புற்றுநோய் என்பது ஆபத்தான நோயாக மாறிவிட்டது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள ரசாயனங்கள் அல்லது பண்புகள் புற்றுநோய் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றன. குறிப்பாக வீட்டில் உபயோகிக்கும் ஆறு பொருட்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

27
பிளாஸ்டிக் பாட்டில்கள்

நாம் தினசரி தண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களில் பிஸ்பெனால் ஏ மற்றும் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன. இவை வெப்பமடையும் போது அல்லது கீறல் ஏற்படும் போது உணவில் கலக்கலாம். இவை இரண்டும் நாளமில்லா சுரப்பி மண்டலத்தை சீர்குலைத்து மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற சில அரிய வகை புற்றுநோய்களை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சூரிய ஒளி மற்றும் மைக்ரோவேவ் ஓவனில் பிளாஸ்டிக் கொள்கலன்களை பயன்படுத்தக் கூடாது. பிஸ்பெனால் ஏ ஃப்ரீ பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி, ஸ்டீல் பாட்டில்களை பயன்படுத்தலாம்.

37
ஏர் ஃபிரஷ்னர்கள் மற்றும் நறுமண மெழுகுவர்த்திகள்

வீடுகளில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் ஏர் ஃபிரஷ்னர்கள் மற்றும் நறுமண மெழுகுவர்த்திகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைடு, பென்சீன், டாலுயீன் போன்ற கரிம சேர்மங்கள் உள்ளன. இவை நீண்ட காலத்திற்கு உள்ளிளுக்கும் பொழுது சுவாசக் கோளாறுகளையும் நுரையீரல் புற்று நோய்களையும் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே நறுமண மெழுகுவர்த்திகளை தவிர்த்து விட்டு இயற்கையான காற்றோட்டத்தை பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு நறுமணப் புகைகள் உருவாக்குவது அல்லது வீட்டிலேயே இயற்கையான ஏர் ஃபிரஷ்னர்கள் பயன்படுத்தலாம். நறுமணம் மிகுந்த மெழுகுவர்த்திகளுக்கு பதிலாக தேன் மெழுகு அல்லது சோயா மெழுகுவர்த்திகளை தேர்வு செய்யலாம்.

47
சுத்தம் செய்யும் பொருட்கள்

சலவை மற்றும் சுத்தம் செய்யும் பொருட்களில் குளோரின், அம்மோனியா, பெட்ரோலியம் அடிப்படையிலான இரசாயனங்கள், ஃபார்மால்டிஹைடு போன்றவை உள்ளன. இவற்றை நீண்ட நேரம் சுவாசிக்கும் பொழுது அல்லது தோலுடன் தொடர்பு கொள்ளும் பொழுது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இந்த ரசாயனங்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இயற்கையான பொருட்கள், வினிகர், பேக்கிங் சோடா, நச்சுத்தன்மையற்ற பொருட்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம். இது போன்ற பொருட்களை வாங்குவதற்கு முன்னர் தயாரிப்புகளில் லேபிளை படித்து பார்த்துவிட்டு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாத பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

57
நான் ஸ்டிக் பாத்திரங்கள்

பெர்ஃப்ளூரோஆக்டானோயிக் அமிலம் (PFOA) எனப்படும் ரசாயனம், பழைய நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதிக சூடு படுத்தும் பொழுது இந்த ரசாயனம் காற்றில் கலக்கலாம். இது சிறுநீரகம், விதைப்பை, தைராய்டு ஆகியவற்றின் புற்று நோய்களை அதிகரிக்கலாம். விலங்குகள் மற்றும் சில மனிதர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நான் ஸ்டிக் பாத்திரங்களில் பெர்ஃப்ளூரோஆக்டோனோயிக் அமிலம் பயன்படுத்தவில்லை. ஆனால் பழைய பாத்திரங்களில் இது இருக்கலாம். எனவே பழைய நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கீறல்கள் விழுந்த நான் ஸ்டிக் பாத்திரங்களை தூக்கி எறிந்து விடுங்கள். துருப்பிடிக்காத ஸ்டீல், வார்ப்பு இரும்பு, செராமிக் பூசப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். புதிய நான் ஸ்டிக் பாத்திரங்களை வாங்கும்பொழுது PFOA-Free குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

67
பூச்சிக்கொல்லிகள்

வீட்டில் பூச்சிகளை கொல்ல பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை கொண்டிருக்கும். உதாரணமாக கிளைபோசெட் போன்ற ரசாயனங்கள் நீண்ட காலத்திற்கு உள்ளிளுக்கும் போது அல்லது அவை தோலுடன் தொடர்பு கொள்ளும் பொழுது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதை தவிர்ப்பதற்கு இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். வீட்டிற்குள் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கையான முறைகளை பின்பற்ற வேண்டும். கொசுவலைகள் போன்றவற்றை அமைக்க வேண்டும். தோட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த நேர்ந்தால் முடிந்தவரை இயற்கை அல்லது குறைந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

77
மர சாமான்கள் மற்றும் கட்டுமான பொருட்கள்

பிளைவுட், பலகைகள், பசை, வார்னிஷ் மற்றும் சில ஜவுளி பொருட்களில் ஃபார்மாலிட்டிஹைடு என்கிற பொதுவான ரசாயனம் கலக்கப்படுகிறது. இது அறையின் காற்றில் கலந்து உள் இழுக்கப்படும் பொழுது சுவாசப் பாதை கோளாறுகளையும், நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. புதிய மரச்சாமான்களை வாங்கும் பொழுது குறைவான ஃபார்மாலிட்டிஹைடு வெளியேற்றத்தைக் கொண்ட பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டிற்குள் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: இந்தப் பொருட்கள் அனைத்தும் புற்றுநோயை உண்டாக்கும் என்பது அர்த்தமல்ல. ஆனால் இவற்றை பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இந்த பொருட்களை நீண்ட காலமாக பயன்படுத்துதல், குறிப்பிட்ட ரசாயனங்களுக்கு அதிக உணர்திறன் இருப்பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகமாக இருக்கலாம். எனவே இந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னர் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories