
நாட்டின் பல மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை தொடர்பான நோய்களும் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இவை தவிர கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்களும் ஏற்படுகின்றனர். குறிப்பாக இந்த மழைக்காத்தில். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஜிகா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகளால் பரவும் நிலைமைகள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
கொசுக்களைத் தடுப்பதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. இருப்பினும், பெரும்பாலான மக்கள் கொசு கடியில் இருந்து தப்பவும், இந்த நோய்களின் பரவல் ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கொசு விரட்டிகளை நம்பியுள்ளனர். ஆனால் கொசு விரட்டிகள் உங்களுக்கு பாதுகாப்பானதா?
பெரும்பாலான கொசு விரட்டி மருந்துகளி DEET, picaridin அல்லது IR3535 போன்ற செயலில் உள்ள பொருட்கள் உள்ளன, அவை சரியாகப் பயன்படுத்தப்படும்போது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், வெவ்வேறு கொசு விரட்டிகளின் தொடர்ச்சியான பயன்பாடு அதாவது தினமும் குறைந்தது 8-10 மணிநேரம் அதனை பயன்படுத்துவதால், இரத்தம், பிளாஸ்மா, வெவ்வேறு திசுக்கள் மற்றும் சிவப்பு அணுக்களை மிகவும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தோல் மற்றும் கண் எரிச்சல், தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், காது, மூக்கு மற்றும் தொண்டை தொற்று, வாந்தி, ஒவ்வாமை, கர்ப்பம் போன்ற கடுமையான மற்றும் நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகளைத் தவிர, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்களை ஏற்படுத்துவதற்கு கொசுவர்த்தி சுருள், மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டிகள் காரணமாகும். அதுமட்டுமின்றி தோலில் நீங்கள் பயன்படுத்தும் கொசு விரட்டி க்ரீம் நோயெதிர்ப்பு அமைப்பில் சிக்கல், புற்றுநோய் கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உங்கள் தோலில் ரசாயனங்களை அடிக்கடி பயன்படுத்துவது நீண்ட காலத்திற்கு சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும், அவற்றில் சில: பல கொசு விரட்டும் கிரீம்கள் அடிக்கடி பயன்படுத்தினால் தோல் அழற்சி மற்றும் தோல் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தோல் தடிப்புகள்
கொசு விரட்டும் க்ரீம்களை அதிகமாகப் பயன்படுத்தினால் தோல் வெடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும்
அரிப்பு
உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள், கொசுக்களுக்கான கிரீம்களை தினமும் தடவினால் அரிப்பு ஏற்படலாம், இது தோலில் காயங்கள் ஏற்படவும் வழிவகுக்கும்.
ஒவ்வாமை
சிறிய குழந்தைகள் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் கொசு விரட்டும் க்ரீம்களை பயன்படுத்தினால், கொசு கிரீம்கள் பல்வேறு வகையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம், இதில் மூச்சுத் திணறல் அடங்கும்.
எரியும் உணர்வு
உங்கள் உதடுகள் அல்லது கண்களைச் சுற்றி கொசு விரட்டியைப் பயன்படுத்தினால், அது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
உணவு விஷம்
குழந்தைகளுக்கு கொசு விரட்டி க்ரீம்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் தவறுதலாக அதை வாயில் வைத்தால் கூட, கொசு விரட்டும் கிரீம் குமட்டல் மற்றும் வாந்தி அல்லது கொடிய உணவு நச்சுக்கு வழிவகுக்கும்.
சரி, இந்த பக்க விளைவுகளுக்கு இயற்கை வைத்தியம் ஏதேனும் உள்ளதா? கொசு விரட்டிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு சிகிச்சையளிக்க சில இயற்கை வைத்தியங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
லேசான சோப்பு, தண்ணீர்
பாதிக்கப்பட்ட பகுதியை லேசான சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் எஞ்சியிருக்கும் விரட்டி இருந்தால், அது உடனடியாக அகற்றப்படும். எனவே, சருமத்தில் அரிப்பு ஏதேனும் இருந்தால் அதை தொடர்ந்து தேய்க்காமல் உலர வைக்கவும். ஏனெனில் நீங்கள் தொடர்ந்து சருமத்தை மேலும் எரிச்சலடையச் செய்யும்.
ஐஸ் மசாஜ்
ஒரு மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து வலி அல்லது வீக்கம் உள்ள இடத்தில் குறைந்தது 10-15 நிமிடங்களுக்குப் மெதுவாக மசாஜ் செய்யலாம். ஏனெனில் இது வீக்கத்தைக் குறைக்கவும் அரிப்புகளைத் தணிக்கவும் உதவும்.
கற்றாழை ஜெல்
அழற்சி மற்றும் அரிப்புகளை குறைக்கும் இயற்கையான பொருட்கள் கற்றாழையில் நிறைந்துள்ளது. எனவே, தோல் எரிச்சல் ஏற்பட்டால், கற்றாழை ஜெல்லை தடவலாம்.
கலமைன் லோஷன்
கேலமைன் லோஷன் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது, எனவே பாதிக்கப்பட்ட பகுதியில் மெல்லிய அடுக்கைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து உலர அனுமதிக்கவும்.
உங்கள் தோல் வகையைப் பொறுத்து இந்த பக்கவிளைவுகள் மாறுபடலாம். எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் போன்றவை உங்கள் தோலில் கொசு விரட்டி க்ரீம்கள் சில விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பாதுகாப்பாக இருக்க, உங்கள் உடல் முழுவதும் பயன்படுத்துவதற்கு முன்பு தோலின் ஒரு சிறிய பகுதியில் முதலில் க்ரீம்களை போட்டு சோதனை செய்யவும்.
மேலும் நீங்கள் பயன்படுத்தும் கொசு விரட்டிகளின் பிராண்டில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றவும். திறந்த காயங்கள், வெட்டுக்கள் அல்லது வீக்கமடைந்த தோலில் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முக்கியம்.