இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் மற்றும் குறைந்த கட்டண ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ், கரிப் ரத், வந்தே பாரத், வந்தே மெட்ரோ, ராஜதானி, சதாப்தி, விஸ்டாடோம், மகாராஜா, MEMU, DEMU என பல ரயில்கள் உள்ளன. எல்லா ரயில்களும் ஒவ்வொரு தனித்துவம் மற்றும் சிறப்புகளைக் கொண்டுள்ளது.