Dad and Daughter: மகள்களை பெற்ற அப்பாவா நீங்க? மகள் பிறந்ததும் அப்பாக்களுக்கு வர்ற 5 ஷாக்கிங் மாற்றங்கள் என்னனு தெரியுமா?

Published : Jul 27, 2026, 03:34 PM IST

Dad and Daughter: ஒரு பெண் குழந்தை பிறந்த தருணம் முதல், ஒரு தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் தொடங்குகின்றன. மகள் பிறந்த பிறகு தந்தையிடம் காணப்படும் சில ஆச்சரியமான மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.

PREV
16
Dad and Daughter - மகள் பிறந்ததும் தந்தையிடம் வரும் மாற்றங்கள்

ஒரு குடும்பத்துல பெண் குழந்தை பிறந்தா, அந்த அப்பாவோட வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். மகளோட சிரிப்பு, அவளோட மழலை பேச்சு, அப்பான்னு கூப்பிடுறதுன்னு எல்லாமே ஒரு அப்பாவோட மனசுல புது உணர்வுகளைக் கொண்டு வரும். அதுவரைக்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, கடினமான மனுஷனா இருந்தவர் கூட, மக பிறந்ததும் மொத்தமா மாறிடுவார். அப்படி ஒரு அப்பாகிட்ட வர்ற 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்னன்னு இப்போ பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - Sani Peyarchi: 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!

26
மென்மையானவராக மாறுவது

நிபுணர்கள் சொல்றபடி, மகள் பிறக்கிறதுக்கு முன்னாடி பல அப்பாக்கள் தங்களோட உணர்ச்சிகளை வெளியே காட்ட தயங்குவாங்க. ஆனா, மகள் முதல் முறையா அவரோட விரலைப் பிடிச்ச அந்த நொடியில இருந்து, அவரோட இதயம் ரொம்ப மென்மையாகிடும். அவ சிரிச்சா சந்தோஷத்துல கண்ணு கலங்கும், அவளுக்கு சின்னதா அடிபட்டா கூட அப்பாவோட மனசு துடிச்சுப் போகும். இதுக்கு முன்னாடி அழாத ஆள் கூட, மகளுக்காக ரொம்ப எமோஷனல் ஆகுறதப் பார்க்கலாம். இந்த நேரத்துலதான் அன்பு காட்டுறது, குடும்பத்தோட நேரம் செலவிடுறதுன்னு நல்ல மாற்றங்கள் தெரியும்.

இதையும் படியுங்கள் - Jasmine: மல்லிகை பூ சீக்கிரம் வாடிப் போகுதா? இந்த ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்!

36
பெண்களின் வலிகளைப் புரிந்துகொள்வது

மகள் பிறந்ததும், ஒவ்வொரு அப்பாவும் தன்னோட மகளோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுவார். அவளோட படிப்பு, பாதுகாப்பு, சமூகத்துல அவ சந்திக்கப்போற சவால்கள்னு எல்லாத்தையும் யோசிப்பார். இதனால, பெண்கள் வாழ்க்கையில சந்திக்கிற பாகுபாடு, பயம், கஷ்டங்கள், பொறுப்புகள் எவ்வளவு கடினமானதுன்னு அவருக்கு இன்னும் தெளிவா புரியும். இதோட விளைவா, பெண்கள் மேல அவருக்கு மரியாதை அதிகமாகும்.

இதையும் படியுங்கள் - Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

46
வேலையில் கவனம் அதிகரிப்பது

மகளோட எதிர்காலத்தை நினைக்கிற ஒவ்வொரு அப்பாவுக்கும் பொறுப்பு உணர்வு தானாகவே அதிகமாகிடும். அவளுக்கு நல்ல படிப்பு, ஆரோக்கியம், வாழ்க்கையில எந்த குறையும் இருக்கக் கூடாதுன்னு ஒரு தவிப்பு வரும். இந்த எண்ணம்தான் அவரை இன்னும் கடினமா உழைக்க வைக்கும். வேலையில அதிக கவனம் செலுத்துறது, பொருளாதார ரீதியா வலுவாக புது வாய்ப்புகளைத் தேடுறது, சேமிக்கிறதுன்னு பழக்கங்கள் அதிகமாகும்.

இதையும் படியுங்கள் - Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

56
மகளுக்குப் பாதுகாவலராக மாறுவது

ஒவ்வொரு அப்பாவும்தான் தன் மகளோட முதல் ஹீரோ. அவ பாதுகாப்பா இருக்கணும், எந்த ஆபத்தும் அவ பக்கத்துல வரக்கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் நினைப்பார். சின்ன வயசுல ஸ்கூலுக்கு போறதுல இருந்து, படிப்பு, நண்பர்கள், எதிர்காலம்னு எல்லா விஷயத்துலயும் அவளுக்குத் துணையா நிக்கணும்னு நினைப்பார். மக பயப்படும்போது தைரியம் சொல்றதும் அப்பாதான். அவளோட வெற்றியைப் பார்த்து பெருமைப்படுறதும் அப்பாதான். தேவைப்பட்டா, தன்னோட சந்தோஷத்தைக்கூட தியாகம் செஞ்சு, மகளுக்காக எந்த கஷ்டத்தையும் தாங்குவார்.

இதையும் படியுங்கள் - ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!

66
மகளே உலகமாகிப் போவது

மகள் பிறந்ததும், பல அப்பாக்களோட வாழ்க்கையில முன்னுரிமைகள் மாறிடும். இதுக்கு முன்னாடி நண்பர்கள், பொழுதுபோக்குன்னு நேரம் செலவழிச்சவங்க, இப்போ சீக்கிரமா வீட்டுக்கு வரணும், மகளோட நேரம் செலவழிக்கணும்னு ஆசைப்படுவாங்க. அவளோட ஒரு சிரிப்புக்காக என்ன வேணா செய்யத் தயாரா இருப்பாங்க. அதனாலதான், ஒரு குடும்பத்துக்கு மகளின் பிறப்பு ஒரு வரம்னா, ஒரு அப்பாவுக்கு அது வாழ்க்கையையே மாத்துற ஒரு அற்புதமான அனுபவம்னு நிபுணர்கள் சொல்றாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories