பொதுவாக, அவ்வப்போது கொட்டாவி விடுவது இயல்பான உடல் செயல்பாடுதான்.
ஆனால் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக கொட்டாவி வருவதுடன், காரணம் தெரியாத கடுமையான பகல்நேர தூக்கம், மயக்கம் அல்லது வேறு உடல்நல அறிகுறிகளும் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
குறிப்பாக, திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கொட்டாவி வருவதுடன் மார்பு வலி, மூச்சுத்திணறல், மயக்கம் அல்லது பிற தீவிர அறிகுறிகள் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
சுருக்கமாக சொன்னால்...
கொட்டாவி என்பது தூக்கம் வருவதற்கான "சிக்னல்" மட்டும் அல்ல. விழிப்பு நிலை மாற்றம், சலிப்பு, கவனம், உடலின் இயற்கையான செயல்முறைகள் மற்றும் சமூகத் தூண்டுதல்கள் என பல காரணிகள் இதில் பங்கு வகிக்கலாம்.
அதேபோல், மற்றவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து நமக்கும் கொட்டாவி வருவது உண்மையான ஒரு நிகழ்வுதான். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மூளைச் செயல்முறை குறித்து அறிவியல் இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
அதனால் அடுத்த முறை அருகில் இருப்பவர் கொட்டாவி விடும்போது உங்களுக்கும் கொட்டாவி வந்தால்... "எனக்கு தூக்கம் வந்துவிட்டது" என்று மட்டும் முடிவு செய்ய வேண்டியதில்லை!