இப்படி முட்டை சாப்பிடக்கூடாது..
முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, ஆனால் நீங்கள் பச்சை முட்டையை சாப்பிடக்கூடாது. அரை வேக்காத முட்டையும் கூடாது. பச்சையாக அல்லது சரியாக வேக வைக்காத முட்டைகளை சாப்பிடுவதால் சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, நீங்கள் முட்டைகளை சாப்பிடும் போதெல்லாம் அவற்றை நன்றாக வேக வைக்க வேண்டும். மேலும் நேரடியாக பச்சை முட்டையை சாப்பிடக்கூடாது.
முட்டையின் வெள்ளைக்கரு & மஞ்சள் கரு..எது நல்லது?
முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது, மஞ்சள் கரு அல்ல என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய சத்துக்கள் உள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள் A, D, E, K, B12 ஃபோலேட் போன்ற முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், லுடீன் மற்றும் கோலின் உள்ளன. இவை உங்கள் ஆரோக்கியத்திலும், குறிப்பாக மூளையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வெள்ளைக்கரு மட்டுமல்ல, மஞ்சள் கருவையும் சேர்த்து முழு முட்டையையும் சாப்பிட வேண்டும்.