Black Pepper Oil: குருமிளகு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பொடுகு மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் உகந்தது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருகருவென தலைமுடி வளர குருமிளகு எண்ணெய் உதவும். குருமிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை ஆரோக்கியமாக்கும், பொடுகுத் தொல்லையைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது.
இது தவிர, கருப்பு மிளகு எண்ணெய், முடிக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. ஆம், நீங்கள் குருமிளகு எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மறுபுறம், உங்களின் முடி நன்றாக வளரும். எனவே குருமிளகு கொண்டு தலைமுடியைக் எப்படி வளர செய்வது என்பது பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
கருப்பு மிளகு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பொடுகை போக்கலாம். குருமிளகு எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும்.
கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. குரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.