ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு மிக முக்கிய இடம் உண்டு. சுக்கிரன் கிரகம் ஆடம்பரமான வாழ்க்கை, அதிக அளவிலான பணம், காதல் வாழ்க்கை, இன்பான வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, செல்வம், புகழ், மதிப்பு, மரியாதை என அனைத்தும் வந்து சேருவதைக் காணலாம்.