காபி தான் காலையில் பலருக்கு புத்துணர்வு பானம். காலையில் காபி குடிக்கும் போது அந்த நாள் சுறுசுறுப்பாகத் தொடங்குகிறது. அதன் நறுமணம் மக்களுக்கு இன்பமான உணர்வை அளிக்கும். காபி உற்சாகம் தருவதோடு அல்லாமல் மற்ற நன்மைகளையும் தருகிறது. ஆனால் பால் கலந்த காபியா? பால் கலக்காத காபியா? (Black coffee/ பிளாக் காபி) எதை காலை குடித்தால் ஆரோக்கியமானது என இங்கு பார்ப்போம்.
25
Black Coffee vs Milk Coffee in Tamil
பால் கலக்காத காபி/பிளாக் காபி நன்மைகள்:
பிளாக் காபி எளிய தயாரிப்பு முறை கொண்ட பானம். இதனை குறைந்த பொருட்களில் தயார் செய்து அருந்தலாம். இந்த காபியை குடித்தால் காலையில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படலாம். உங்கள் ஆற்றலும் அதிகமாக இருக்கும். உறக்கத்தைத் தரும் ரசாயனமான அடினோசைன் சுரப்பைத் தடுக்கும். மனநிலையை மேம்படுத்தும் டோபமைன் சுரக்க மூளையைத் தூண்டும். நாள் முழுக்க விழிப்புணர்வுடன் செயல்பட வைக்கிறது. மூளையின் செயல்திறனை தூண்டும். கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கும் அசிடைல்கொலின் மாதிரியான நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை அதிகப்படுத்தும்.
அளவாக பிளாக் காபி குடிப்பதால் பக்கவாதம், வகை 2 நீரிழிவு, சில வகை புற்றுநோய்களை கூட குறைக்கமுடியும். பிளாக் காபியில் கிடைக்கும் பாலிஃபீனால் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியம் மேம்பட பிளாக் காபி காரணமாக அமைகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். பசியை மட்டுப்படுத்துவதால் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. காபியில் உள்ள காஃபின் என்ற உள்ளடக்கம், உடலின் ஆற்றலை அதிகரிக்க கொழுப்பை எரிக்கும். இதனால் உடல் திறனை அதிகமாகும். இதன் காரணமாக உடற்பயிற்சி ஆர்வலர்கள், எடையை குறைக்க நினைப்பர்கள் பிளாக் காபி குடிக்கிறார்கள்.
இதில் கால்சியம், எலும்புகள் வலுவாக உதவும் வைட்டமின் டி, மற்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இதை நாள்தோறும் குடித்தால் ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவுகள் உள்ளிட்ட எலும்பு சார்ந்த நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு குறையும். வயதானவர்கள் பால் காபி குடித்தால் புரதச்சத்து, வைட்டமின்கள் B2, B12 போன்ற உயிர்ச்சத்துகள், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய கனிமங்கள் கிடைக்கும். இவை தசை செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்பு செயல்பாடு, ஆற்றல் உற்பத்தியை ஆதரிக்கும். பால் காபியில் உள்ள புரதம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் அதிகம் உண்பதை குறைக்கலாம். எடை குறைப்புக்கு இது உதவும்.
55
Black Coffee vs Milk Coffee in Tamil
பால் காபி vs பிளாக் காபியில் சிறந்தது எது?
காலையில் எந்த காபி குடித்தாலும் உடலுக்கு நன்மையே கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு பிளாக் காபி ஏற்றது. ஒவ்வொருவரின் தேவையை பொறுத்து காபியை தேர்வு செய்யலாம். குறைந்த கலோரி, கொஞ்சம் கசப்பு சுவை வேண்டுமென நினைப்பவர்கள் பிளாக் காபி அருந்தலாம். அதே நேரம் அதிக கலோரிகள் இருந்தாலும் சுவையாக வேண்டுமென நினைத்தால் பால் காபி குடிக்கலாம். மாலை நேரத்தில் காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.