
குளிர்காலம் ஆரம்பமாகி விட்டதால் இந்த பருவத்தில் குளிர்ந்த காற்று ரொம்பவே வீசும். இத்தகைய சூழ்நிலைகள் மக்கள் தங்களை சூடாக வைத்துக் கொள்ள சூடான ஆடைகள் அணிவது மட்டுமின்றி, சூடான பானங்களையும் குடிக்க விரும்புவார்கள். அந்த வகையில் குளிர்காலத்தில் சூடான பாலையும் குடிப்பது ஒரு சிறந்த தேர்வாகும்.
ஆம், பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மிகவும் நன்மை பயக்கும். பாலில் கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக நாம் பாலை காலை எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன்பும் ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பது வழக்கம். அந்த வகையில், குளிர்காலத்தில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் பால் குடிக்கும் சரியான முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இப்படி பால் குடித்தால் உடல் 'எடை' அதிகமாகும் தெரியுமா?
குளிர்காலத்தில் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
குளிர்காலத்தில் பால் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவை..
- குளிர்காலத்தில் தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவடையும்.
- உடல் உஷ்ணம் பெறுவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
- சரும மற்றும் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
- குளிர்காலத்தில் தினமும் பால் குடித்து வந்தால் தசைகளில் சிறந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
- முக்கியமாக சூடான பாலை தினமும் குடித்து வந்தால் இருமல் தொண்டை போன்ற பருவகால பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- இது தவிர, செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
குளிர்காலத்தில் பால் குடிக்க சரியான நேரம்:
நீங்கள் காலை அல்லது இரவு தூங்குவதற்கு முன்பாக சுமார் 2-3 மணி நேரத்திற்கு முன்பாக தான் பால் குடிக்க வேண்டும். அதுதான் நல்லது. அதுவும் குறிப்பாக, தினமும் காலை ஒரு கிளாஸ் பால் குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதம் கிடைக்கும். இது தவிர, உங்களுக்கு பசியும் அதிகம் எடுக்காது. ஏனெனில், பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அதுமட்டுமின்றி, இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் சூடான பால் தினமும் குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த முறையை நீங்கள் கோடை அல்லது குளிர்காலம் என்றில்லாமல், எந்த பருவ காலத்திலும் பின்பற்றலாம்.
குளிர்காலத்தில் பாலை இப்படியும் குடிக்கலாம்:
மஞ்சள் தூள், கிராம்பு, கருப்பு மிளகு இலவங்கப்பட்டை தூள் போன்ற மசாலாக்களில் ஒன்றை நீங்கள் பாலில் கலந்து குடித்து வந்தால் கூட குளிர்காலத்தில் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் உங்களது உடலுக்கும் வெப்பம் கிடைக்கும்.
இதையும் படிங்க: இரவில் '1' கிளாஸ் பால், ஒரு வாழைப்பழம்.. ஏன் கண்டிப்பாக ஆண்கள் சாப்பிடனும்?