
பருவ மழை காலம் ஆரம்பமாக போகுது. பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றன. இந்த ஈரமான காலநிலையில் நன்றாக வளரும் பல வகையான தாவரங்கள், காய்கறிகள், பூக்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. அந்த வகையில் இந்த பருவத்தில் உங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் எளிதாக வளரக்கூடிய சில சிறப்பான காய்கறிகள் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தக்காளி பருவமழைக்கு வளரக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். மழைக்கால ஈரப்பதற்கு இது நன்றாக வளரும். இதற்கு போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வடிகால் மட்டுமே தேவை. தக்காளி செடியை களிமண்தொட்டியில் வளர்க்க வேண்டும். ஆனால் மழையால் ஏற்படும் பூஞ்சை தொற்றுகள் குறித்து மிகுந்த கவனம் தேவை.
கொத்தமல்லி இலையானது பருவமழை காலங்களில் நன்றாக வளரும். இவற்றின் விதையை நேரடியாக விதைக்கலாம். ஆனால் தோட்டியில் விதை போடும் முன் மண் சற்று ஈரமாக இருக்க வேண்டும். சுவைக்காக பூக்களை பறிப்பதற்கு முன் அவற்றின் இலைகளை அறுவடை செய்து விடுங்கள்.
பசலைக்கீரை அதிக சத்தானது. இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. பசலைக் கீரையானது வைட்டமின் ஏ, சி , கே, மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகிய வெற்றி நல்ல மூலமாகவும். மழைக்காலத்தில் குறைந்த வெப்பநிலையால் பசலைக் கீரை செடி நன்றாக வளரும். விதை விதைப்பதிலிருந்து அதை அறுவடை செய்யும் வரை சுமார் 6 வாரங்கள் குளிர்ந்த வானிலையை இதற்கு தேவைப்படும்.
பருவமழை காலத்தில் மாடி தோட்டத்தில் பச்சை மிளகாய் வளர்க்கலாம். இது மழை பருவத்தில் நன்றாக வளரும். இதற்கு போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் தண்ணீர் அவசியம்.
ஈரமான காலநிலையில் வெண்டைக்காய் செடி நன்றாக வளரும். வெண்டைக்காய் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். மழைக்காலங்களில் இது மிகவும் திறமையாக முளைக்கும். இந்தச் செடியின் விதைகள் முளைகள் சுமார் ஐந்து முதல் ஆறு நாட்கள் ஆகும். வெண்டைக்காய் முழுமையாக முளைக்க 55 முதல் 65 நாட்கள் ஆகும்.
பொதுவாக கத்தரிக்காய் வளர அதிக இடம் தேவைப்படுகிறது. உங்களிடம் பெரிய தொட்டி இருந்தால் அதை உங்கள் வீட்டில் மாடியில் வைத்து வளர்க்கலாம். இந்த செடி நன்றாக வளர நிறைய சூரிய ஒளி தேவைப்படும். தொடர்ந்து தண்ணீர் ஊற்றினால் விதைகள் பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் முளைத்து விடும். கத்தரிக்காய் மட்டுமின்றி பீன்ஸ், பாகற்காய், பூசணிக்காய் மற்றும் சுரைக்காய் ஆகியவையும் மாடி தோட்டத்தில் வளரக்கூடிய பொதுவான பருவமழை காய்கறிகள் ஆகும்.