Best Time for Hair Oil: தலைமுடிக்கு எண்ணெய் எப்போது வைக்க வேண்டும்? இரவா, பகலா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

Published : May 27, 2026, 10:28 PM IST

Best Time for Hair Oil: தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளர எண்ணெய் வைப்பது முக்கியமானது. ஆனால் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தினால்தான் முழு பலன் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது எப்போது என்று பார்க்கலாம்.

PREV
15
முடிக்கு எண்ணெய் வைக்கும் சரியான நேரம்

மென்மையான, அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அதற்காக விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன், தலைமுடி பராமரிப்பின் அடிப்படை பழக்கங்களில் ஒன்றான எண்ணெய் வைப்பது முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது புதிய விஷயம் அல்ல. தலைமுறைகளாக வீட்டில் பின்பற்றப்பட்ட இந்த வழக்கம், முடி வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் எளிய பராமரிப்பு முறையாக பார்க்கப்படுகிறது.

25
முடி உதிர்வு தீர்வு

எண்ணெய் வைப்பது மட்டும் போதாது, அதை எப்போது வைக்கிறோம் என்பதுதான் முக்கியம் என தலைமுடி பராமரிப்பு நிபுணர்கள் விளக்குகின்றனர். அவர்களது கருத்துப்படி, இரவு நேரமே தலைமுடிக்கு எண்ணெய் வைக்க சிறந்த நேரமாக கருதப்படுகிறது. காரணம், அந்த நேரத்தில் உடல் ஓய்வில் இருப்பதால், எண்ணெய் தலைச்சருமத்தில் மெதுவாக உறிஞ்சப்பட்டு வேர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்க உதவுகிறது.

35
இரவு எண்ணெய் பயன்

சிறிதளவு சூடேற்றிய எண்ணெயை தலைச்சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்வது இரட்டை பலனை தரும் என கூறப்படுகிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வேர்களை பலப்படுத்துவதோடு, நாள் முழுவதும் இருந்த மனஅழுத்தம் மற்றும் சோர்வையும் குறைக்க உதவலாம். இதனால் அமைதியான தூக்கமும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

45
காலையில் எண்ணெய் வைக்கலாமா?

அதே நேரத்தில், காலை எண்ணெய் வைத்து வெளியே செல்லும் பழக்கம் சில சிக்கல்களை உருவாக்கக்கூடும். குறிப்பாக கோடைக்காலத்தில் தூசி, புகை மற்றும் காற்றில் உள்ள மாசுக்கள் எண்ணெய் தடவிய தலைச்சருமத்தில் எளிதாக ஒட்டிக்கொள்ளும். இதனால் பொடுகு, அரிப்பு மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இரவில் எண்ணெய் வைக்க முடியாதவர்கள் குளிப்பதற்கு 1 முதல் 2 மணி நேரத்திற்கு முன் பயன்படுத்தலாம்.

55
தலைச்சரும பராமரிப்பு

மற்றொரு முக்கிய விஷயம், எண்ணெயை நீண்ட நாட்கள் தலையில் வைத்திருப்பது நல்லதல்ல என்பதே. வாரக்கணக்கில் எண்ணெய் வைப்பது தலைச்சருமத்தில் அழுக்கு சேர்ந்து தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இரவில் எண்ணெய் வைத்தால் மறுநாள் தலைமுடியை சுத்தம் செய்வது நல்லது. அதோடு, மென்மையான அல்லது மூலிகை கலந்த ஷாம்புகளை பயன்படுத்துவது தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories