முடி உதிர்தல், பொடுகு தொல்லைக்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு நிரந்தர தீர்வு

First Published | Sep 27, 2024, 11:20 PM IST

ஊட்டச்சத்து குறைபாடு, நோய், ஹார்மோன் பிரச்சினை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இளம் வயதிலேயே முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லை அதிகரிக்கின்றன. இவற்றை வீட்டில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தியே கட்டுப்படுத்தலாம். 

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இது முடியை வலுப்படுத்தவும் முடி உதிர்வைத் தடுக்கவும் உதவுகிறது. உச்சந்தலை மற்றும் முடியில் தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரத்திற்கு ஆயில் மசாஜ் செய்து சில மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி செய்வதால் முடியின் வேர்ப்பகுதி உறுதியடைகிறது.

கற்றாழை

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதி பொருட்கள் கற்றாழையில் அதிகமாக உள்ளன. கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை ஷாம்பு கொண்டு கழுவவும். கற்றாழை ஜெல் பொதுவாக முடியில் பயன்படுத்த பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு குளிர்ச்சி காரணமாக ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Tap to resize

வெந்தயம்

வெந்தயத்தில் புரதங்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதை ஷாம்பு கொண்டு கழுவவும். இதனால் உடல் சூடு தனிவதோடு முடிக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

வெங்காய சாறு

வெங்காய சாற்றில் சல்பர் சேர்மங்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. உச்சந்தலையில் வெங்காய சாற்றை தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதை கழுவவும். இதனை முதலில் பயன்படுத்தும் போது கண் எரிச்சல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாகக் கையாள வேண்டும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுவதைப் போன்றே ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன. கிரீன் டீ தயாரித்து உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. இது முடி உதிர்வைத் தடுக்கவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இந்த கலவையை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

Latest Videos

click me!