காலையில் நாம் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் அது நமது உடலை சுத்தப்படுத்த பெரிய அளவில் உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேறி, உடலில் உள்ள தேவையற்ற நீரும், உப்பும் நமது உடலை விட்டு வெளியேறும் என்றும் கூறப்படுகிறது. உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவு பொருட்களை இந்த வெந்நீர் வெளியேற்றுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நமக்கு வராது என்கிறார்கள் மருத்துவர்கள். வயிற்று வலி, உப்புசம் மற்றும் ஜீரண கோளாறு போன்றவற்றிற்கும் இது ஒரு நல்ல அருமருந்தாக திகழ்கிறது.