Banana leaf food serving order: வாழை இலையில் சாப்பிடுறீங்களா? உணவு பரிமாறும் சரியான வரிசை இதுதான்!

Published : Aug 26, 2026, 01:15 PM IST

Banana leaf eating method: வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு பாரம்பரிய முறை உள்ளது. இலையை எப்படி வைக்க வேண்டும், அதில் உப்பு ஊறுகாய், பொரியல், சாதம், சாம்பார், ரசம், தயிர் உள்ளிட்டவற்றை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

PREV
17
வாழை இலையில் சாப்பிடுறீங்களா?

வாழை இலையில் உணவு பரிமாறுவது வெறும் பழக்கம் மட்டுமல்ல, அதற்கென பாரம்பரிய முறை உள்ளது. இலையின் எந்தப் பகுதியில் உப்பு, ஊறுகாய், பொரியல், கூட்டு போன்றவற்றை வைக்க வேண்டும், எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என பல விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அப்படி வாழையில் இலையில் பரிமாறும்போது உணவை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
வாழை இலையில் உணவு பரிமாறும் வரிசை முறை

வாழை இலையின் நுனிப் பகுதி உணவு உண்ணும் நபரின் இடது புறத்திலும், அகலமான பகுதி வலது புறத்திலும் இருக்க வேண்டும். உணவு பரிமாறுவதற்கு முன்பாக இலையைச் சுத்தமான நீரில் கழுவிப் பயன்படுத்துவது வழக்கம். முதலில் இலையின் இடது மேல் பகுதியில் உப்பு வைக்க வேண்டும். அதற்கு அருகில் சிறிதளவு ஊறுகாய் பரிமாறலாம்.

37
துவையல், பச்சடி, பொரியல், கூட்டு இடம்பெறும் இடம் எது?

அதன்பின், இலையின் மேல் பகுதியில் துவையல், பச்சடி, பொரியல் மற்றும் கூட்டு வகைகள் இடமிருந்து வலது புறமாக வரிசையாக வைக்கப்படும்.தொடர்ந்து, அப்பளம், வடை, சிப்ஸ் போன்றவை இலையின் இடது ஓரத்தில் வைக்கலாம். இதற்கு அருகில் இனிப்பு வகைகள் வைக்கப்படும்.

47
முதலில் என்ன வைக்க வேண்டும்?

இதனையடுத்து, இலையின் நடுப்பகுதியில் சாதம் பரிமாறப்பட்டு, முதலில் பருப்பு மற்றும் நெய் சேர்ப்பது வழக்கம். பின்னர் சாதத்துடன் சாம்பார் பரிமாறலாம்.

57
சுவையான வத்தக்குழும்பு

சாம்பாருக்குப் பிறகு வத்தக்குழம்பு பரிமாறப்படும்.

67
இறுதியாக இடம்பெறும் ரசம்

தொடர்ந்து ரசம் சாதம் பரிமாறப்படுகிறது. சில இடங்களில் இனிப்பு வகைகள் உணவின் ஆரம்பத்திலேயே பரிமாறப்படும். வேறு சில இடங்களில் உணவின் இறுதியில் இனிப்பு வழங்கும் வழக்கமும் உள்ளது.

77
தயிருடன் நிறைவு பெறும் விருந்து

உணவின் இறுதியில் மோர் அல்லது தயிர் ஊற்றி சாப்பிடலாம். இந்தப் பரிமாறும் முறை குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். சில இடங்களில் சாதத்துடன் முதலில் வத்தக்குழம்பு பரிமாறும் வழக்கமும் உள்ளது. இறுதியாக பாயாசம், பழம் மற்றும் வெற்றிலை-பாக்கு போன்றவை விருந்தின் வழக்கத்திற்கு ஏற்ப பரிமாறப்படும். சுப நிகழ்ச்சிகளில் உணவு உண்ட பிறகு, வாழை இலையின் மேல் பகுதியைக் கீழ்நோக்கி மடித்து மூடுவது வழக்கம். இது விருந்து நிறைவடைந்ததைக் குறிக்கும் பாரம்பரிய முறையாகக் கருதப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories