Foot Wear Tips
நீங்கள் ஸ்டைலுக்காக மூடிய நிலையில் உள்ள காலணிகள் அல்லது ஷூ அணிந்துவிட்டு பின்னர் மீண்டும் திறந்த நிலையில் உள்ள காலணிகளை அணியும் போது உங்கள் கால்களில் படும் காற்றின் மூலம் இரு காலணிகள் இடையேயான வித்தியாசத்தை எளிதில் உணரலாம். திறந்த காலணிகளுடன் ஒரு வேலையை எளிதில் செய்யலாம். ஆனால் ஷூ அணிவதற்கு முன்னதாக சாக்ஸ் அணிய வேண்டும், பின்னர் தான் ஷூ அணிய வேண்டும். சில நேலங்களில் இவற்றை அணிவதையே மிகப்பெரிய வேலையாக நீங்கள் நினைக்கலாம்.
Foot Wear Tips
மேலும் திறந்த நிலையில் உள்ள காலணிகள் உங்கள் கால்களுக்கு தேவையான காற்றோட்டத்தை அளிக்கிறது. ஒருவர் திறந்த நிலையில் உள்ள காலணியை அணிவதும், மூடிய நிலையில் உள்ள காலணியை அணிவதும் அவரவர் தனப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றது. ஆனால் நமது சீதோசன நிலைக்கு திறந்த நிலையில் உள்ள காலணியை அணிவதே சிறந்தது என சொல்லும் தோல் மருத்துவர்கள் அதில் உள்ள ஒரு பிரச்சினையையும் எடுத்துரைக்கின்றனர்.
திறந்த நிலை காலணிகளை அணிவதால் நம் கால்களில் தூசி, அழுக்கு எளிதில் தொற்ற வாய்ப்பு உள்ளது. மேலும் சூரிய ஒளி நேரடியாக படுவதால் அது நமது தோலை வறட்சியாக மாற்றுகிறது. மருத்துவர்கள் திறந்த நிலை காலணிகளை பரிந்துரைத்தாலும் அதனை அணியும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
Foot Wear Tips
காலநிலை மாற்றம்
கோடை காலங்களில் திறந்த நிலை காலணிகள் நம் கால்களில் உருவாகும் வியர்வையை தடுக்கிறது. இதனால் வியர்வை மூலம் ஏற்படும் நோய் தொற்று தவிர்க்கப்படுகிறது. இதே போன்று குளிர்காலம், மழை காலங்களில் திறந்த நிலை காலணிகள் உங்கள் கால்களுக்கு காற்று சுழற்சியை ஏற்படுத்துகிறது. மேலும் கால்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வியர்வை சுரப்பதையும் தவிர்க்கிறது.
Foot Wear Tips
ஆனால் கோடையில் திறந்த காலணிகளை அணிவதால் ஏற்படும் வறட்சி மற்றும் சூரிய பாதிப்பு பற்றி என்ன?
"திறந்த காலணிகளை அணிவது வறண்ட சருமத்திற்கு வழிவகுக்காது, ஆனால் உங்கள் கால்களை கவனிக்காமல் இருப்பது நிச்சயம். கைகள் மற்றும் உடலின் மற்ற பாகங்களை கவனிப்பது போல் கால்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. கால் ஆரோக்கியம் என்று வரும்போது ஒருவர் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேசமயம், குளிர்காலத்தில், காலணிகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும், ஏனெனில் அவை உங்கள் கால்களை சூடாக வைத்திருக்கின்றன. “குளிர்காலத்தில் பாதங்கள் சூடாகவும், தடுமாறி விழுவதையும் தவிர்க்க மூடிய பாதணிகளை அணியுங்கள். கம்பளி செருப்புகளும் உதவியாக இருக்கும்,” என்கின்றனர்.
Foot Wear Tips
இதற்கிடையில் 100 கிராம் நொறுக்கப்பட்ட கற்பூரத்தை தண்ணீரில் கலந்து, உங்கள் கால்களுக்குக் கீழே தடவவும். இந்த மருந்தை நீங்கள் ஒரு மாதத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று இளமையாக வைத்திருக்கவும், மென்மையாகவும், பாதத்தில் வரும் முதிர்ச்சியை தாமதப்படுத்தவும் உதவும் என்கின்றனர். காலணி அணிவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்பதால் மருத்துவர்கள் அதில் உள்ள நிறை, குறைகளை மட்டும் தெரிவிக்கின்றனர்.