Anger Management: மூக்குக்கு மேல கோபம் வருதா?! இந்த 5 டிப்ஸ் உங்களுக்குத்தான்!

Published : Jun 23, 2026, 01:27 PM IST

திடீரென வரும் கோபம் உங்கள் மன அமைதியை கெடுக்கிறதா? கோபத்தைக் கட்டுப்படுத்தி, சில நிமிடங்களில் மனநிலையை மாற்ற உதவும் எளிய மற்றும் பயனுள்ள சூப்பர் டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்!

PREV
16
கோபம் உங்களையும் மீறி வருதா?
கண்டிப்பாக இனி கோபம் காணாமல் போகும்

எவ்வளவு அமைதியான குணம் கொண்டவராக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் திடீரென கோபம் வந்து, யோசிக்காமல் பேசவோ அல்லது செயல்படவோ நேரிடலாம். அந்த ஒரு நிமிட உணர்ச்சி, நல்ல உறவுகளையும் மன அமைதியையும் பாதிக்கக்கூடும். கோபம் வந்த பிறகு வருத்தப்படுவதற்குப் பதிலாக, அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். சில எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் முறைகள், கோபத்தை சில நிமிடங்களிலேயே குறைக்க உதவும். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக சிந்தித்து செயல்பட உதவும், அனைவரும் பின்பற்றக்கூடிய பயனுள்ள கோபக் கட்டுப்பாட்டு டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

26
இசையால் மனதை அமைதிப்படுத்துங்கள்

கோபம் அதிகமாக இருக்கும் நேரத்தில், உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பது மனநிலையை விரைவாக மாற்ற உதவும். மென்மையான பாடல்கள் அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இசை, மன அழுத்தத்தைக் குறைத்து கோபத்தை மெதுவாக தணிக்கச் செய்யும். அதேபோல், உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நிகழ்ச்சி, டிவி ஷோ அல்லது திரைப்படத்தைப் பார்ப்பதும் கவனத்தைத் திசைதிருப்பி, மனதை இலகுவாக்கும். சில நிமிடங்கள் இதுபோன்ற பொழுதுபோக்கில் ஈடுபடுவது, கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாக இருக்கும்.

36
உடலை அசையச் செய்யுங்கள்

கோபமாக இருக்கும் நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பதைத் தவிர்க்குங்கள். அதற்குப் பதிலாக எழுந்து சில நிமிடங்கள் நடப்பது, லேசான ஸ்ட்ரெச்சிங் செய்வது அல்லது எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. உடலை அசைப்பதால் மன அழுத்தம் குறைந்து, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். இதனால் கோபம் படிப்படியாக தணிந்து, எந்த சூழ்நிலையையும் நிதானமாகச் சிந்தித்து கையாளும் மனநிலை உருவாகும்.

46
சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

கோபம் அதிகமாக இருக்கும் நேரத்தில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவும். வாக்கிங் செய்யும்போது உடலின் பதற்றம் குறைந்து, உணர்ச்சிகளும் மெதுவாக கட்டுக்குள் வரும். அதே நேரத்தில், கோபத்தைத் தூண்டிய சூழ்நிலையை நிதானமாக சிந்திக்கவும், அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்த்து சரியான முடிவுக்கு வரவும் தேவையான நேரம் கிடைக்கும். இதனால் தேவையற்ற வாக்குவாதங்களையும் பின்னர் ஏற்படும் வருத்தங்களையும் தவிர்க்க முடியும்.

56
ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்

கோபத்தைக் கட்டுப்படுத்த மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்று ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி. மெதுவாக ஆழமாக மூச்சை இழுத்து, சில விநாடிகள் வைத்திருந்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை சில முறை தொடர்ந்து செய்தால், உடலின் பதற்றம் குறைந்து மனமும் தசைகளும் இயல்பாக அமைதியடையும். இதனால் கோபம் படிப்படியாக குறைந்து, உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலையை தெளிவாகப் புரிந்து கொண்டு சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

66
உங்கள் உணர்வுகளை எழுதிப் பாருங்கள்

கோபமாக இருக்கும் நேரத்தில் மனதில் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு டைரியில் எழுதிப் பாருங்கள். இது கோபம் ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். எண்ணங்களை எழுத்தாகப் பதிவு செய்வதால் மன அழுத்தமும் குறையும். மேலும், பிரச்சனையை வேறு கோணத்தில் சிந்திக்கவும், உணர்ச்சிவசப்படாமல் அதற்கான சரியான தீர்வைக் கண்டறியவும் இந்த பழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories