ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி.! வைரலாகும் சூப்பர் க்ளிக்ஸ் !!

First Published | Jan 18, 2023, 6:38 PM IST

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியாவின் முக்கிய பணக்காரர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்ய உள்ளார்.

என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள்தான் ராதிகா மெர்ச்சன்ட். செவ்வாய் கிழமையான நேற்று இந்த ஜோடிக்கு மெஹந்தி விழா நடந்தது. இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tap to resize

இதில் மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் லெஹங்காவில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்.  ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா ராதிகாவின் லெஹங்காவை வடிவமைத்துள்ளார். ராதிகா ஆலியாபட்டின் கலன்க் படத்திலிருந்து ’கர் மோர் பர்தேசியா’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தற்போது, அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார். அவர் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் போன்ற கூட்டு நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களில் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் வாரிய இயக்குநராக உள்ளார். 2017 இல், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் இஸ்ப்ரவா குழுமத்தில் சேர்ந்தார்.

எமரால்டு மற்றும் கோல்டு நிறைந்த நகைகளை அணிந்திருந்தார். அதிக வேலைப்பாடுகள் கொண்ட நீளமான ஹெவி நெக்லஸ் , சோக்கர், நெற்றிச்சுட்டி , ஜிமிக்கி, மோதிரம் என கலர்புல்லாக காட்சி அளித்தார் ராதிகா மெர்ச்சன்ட்.

Latest Videos

click me!