ஆரஞ்சு பழத்தோல் பொடியை பயன்படுத்தும் முறை:
பொடுகை போக்க : தயிருடன் ஆரஞ்சு பழத்தோல் பொடியை கலந்து அதை தலையில் தடவி சுமார் பத்து நிமிடம் கழித்து குளிக்கவும்.
முடி நரைப்பது தடுக்க : இதற்கு ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு பழத்தோல், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் ஆகியவற்ற நன்கு கலந்து முடியில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து குளிக்கவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
பளபளப்பான கூந்தலுக்கு : இதற்கு 2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த பேஸ்டை முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளிக்கவும்.
முகத்திற்கு : 2 ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகப்பரு நீங்கும்.
சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மறைய : ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி சந்தன பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவும்.