பாப்பிங் பப்பில் ரேப் எவ்வாறு மனஅழுத்தத்தை குறைக்கும்?
நாம் ஆன்லைனில் ஏதேனும் பொருட்களை ஆர்டர் செய்தால்.. அந்த பொருளை ஒரு பாப்பிங் பப்பிலில் சுற்றி கூரியர் செய்கிறார்கள். ஆனால் அந்த பாப்பிங் பப்பில் பார்த்தவுடன் நம்மில் பலருக்கும் அந்த குமிழ்களை உடைக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அவற்றை உடைப்பது நல்லது என்று சிலர் வாதிடுகின்றனர்.. நல்லதல்ல என்று பலர் வாதிடுகின்றனர். உண்மையில், இந்த குமிழ்களை உடைப்பதும் நம் மனநிலையைப் பிரதிபலிக்குமா? இது நமக்கு நல்லது செய்யுமா? அல்லது பிரச்சனைகளை உருவாக்குமா என்பதை இப்போது பார்ப்போம்…
நன்மைகள் என்ன
இந்த குமிழ்களை உடைப்பதை பலர் வேடிக்கையாக நினைக்கிறார்கள். ஆனால், இதனால் பல நன்மைகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மன நலப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறதாம். சரி, அந்த நன்மைகள் என்னவென்று ஒருமுறை பார்ப்போம்.
பல ஆய்வுகளில் தெரியவந்த விஷயம் என்னவென்றால், இந்த குமிழ்களை உடைப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறதாம். இவற்றை நம் கைகளால் உடைக்கும்போது நம் மூளையில் இருந்து மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் வெளியாகின்றனவாம். இதனால் நமக்குத் தெரியாமலே மகிழ்ச்சி ஏற்படுகிறதாம்.
மன அழுத்தம்
இன்றைய காலகட்டத்தில் பலர் பல பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால். இந்த குமிழ்களை உடைப்பதால் மன அழுத்தம் குறைகிறதாம்.மன அழுத்தம் குறைந்து மனதுக்கு இதமாக இருக்கிறதாம். அதனால், அவ்வப்போது இப்படி அவற்றை உடைப்பதும் நல்லதுதானாம்.
பாப்பிங் பப்பில்
நாம் டிவி பார்க்கும்போது, இசை கேட்கும்போது நம் மூளை எவ்வளவு கவனமாக இருக்குமோ, அதேபோல், இந்த குமிழ்களை உடைக்கும்போதும், கவனம் அதிகரிக்குமாம். அதனால்.. இவற்றை உடைப்பது நல்லது. மேலும், மன திருப்தியையும் தருகிறது.
கவனம் அதிகரித்தல்
உங்களுக்கு எப்போதாவது ஏதாவது வேலை செய்யும்போது கவனம் வரவில்லை என்று தோன்றினால், அந்த நேரத்தில் நீங்கள் இந்த குமிழ்களை உடைத்தால் போதுமாம், மீண்டும் கவனம் அதிகரிக்குமாம்.