பூமியின் ஆழமான Mantle பகுதியில் ஏற்படும் மாபெரும் வெப்பச் சலனம் மற்றும் பாறைக்குழம்பு உந்துதல் கண்டப்பகுதிகளில் நிலவியல் பிளவுகளை உருவாக்குகின்றன இவை சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் மற்றும் மண்டலக் காலநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்
நாம் உலக வரைபடத்தில் பார்க்கும் ஆப்பிரிக்கக் கண்டம், அமைதியாகத் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியில் நடக்கும் மாபெரும் புவியியல் மாற்றங்களால் ஆப்பிரிக்கக் கண்டம் மெல்ல மெல்ல இரண்டாகப் பிளவுபட்டு வருகிறது. இந்த அதிரடி மாற்றத்தின் முடிவில், பூமியில் ஒரு புதிய பெருங்கடலே பிறக்கவுள்ளது!
மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆச்சரிய மூட்டும் புவியியல் நிகழ்வின் பின்னணியில் உள்ள பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்களை இங்கு விரிவாகக் காண்போம்.
26
3,000 கிலோமீட்டர் நீளப் பிளவு (East African Rift) :
ஆப்பிரிக்காவின் கிழக்குக் பகுதியில் எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா போன்ற நாடுகளின் வழியாக சுமார் 3,000 கிலோமீட்டர் நீளத்திற்கு நிலப்பரப்பு பிளந்து கொண்டு செல்கிறது. இதனை புவியியலாளர்கள் 'கிழக்கு ஆப்பிரிக்க பிளவு மண்டலம்' (East African Rift System) என்று அழைக்கிறார்கள்.
ஆப்பிரிக்கத் தட்டு (African Plate) இரண்டு புதிய தட்டுகளாகப் பிரிகிறது.1. நுபியன் தட்டு (Nubian Plate): மேற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பெரிய தட்டு. 2. சோமாலி தட்டு (Somali Plate): சோமாலியா, கென்யா, தன்னாட்சி பெற்ற தீவான மடகாஸ்கர் அடங்கிய கிழக்கு தட்டு.
36
ஒரே இரவில் உருவான 56 கி.மீ நீளப் பிளவு:
கடந்த 2005-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் 'அஃபார்' (Afar Desert) பாலைவனப் பகுதியில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெறும் 10 நாட்களில் சுமார் 56 கிலோமீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட மாபெரும் பிளவு பூமியின் மேற்பரப்பில் திடீரெனத் திறந்தது. பூமிக்கு அடியிலிருந்து மேலெழும்பும் அக்னிப் பிழம்பான 'மேக்மா' (Magma) பாறைகளை இருபுறமும் தள்ளி நிலப்பரப்பை விலக்குவதே இதற்கு முதன்மைக் காரணம் ஆகும்.
சமீபத்திய ஆய்வின்படி (2026), கென்யாவில் உள்ள 'துர்கானா பிளவு' (Turkana Rift) பகுதியில் பூமியின் மேலோடு (Earth's Crust) வழக்கமான 35 கி.மீ தடிமனிலிருந்து வெறும் 13 கி.மீ ஆக மெலிந்து 'நெக்கிங்' எனும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளது. ஜவ்வு மிட்டாயை இருபுறமும் இழுத்தால் நடுவில் மெலிந்து அறுந்து போவது போல, பூமியின் தட்டு பிளவடையத் தொடங்குவதை உறுதி செய்யும் எல்லை நிலையை (Critical Threshold) ஆப்பிரிக்க நிலப்பரப்பு கடந்துவிட்டது!
56
நிலத்தால் சூழப்பட்ட நாடுகளுக்குக் கரடிக் கடற்கரை:
இந்த அதிர்ச்சி பிளவால் நிலத்தால் சூழப்பட்ட (Landlocked) நாடுகளான உகாண்டா, ருவாண்டா, புருண்டி, ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புதிய விடிவுகாலம் பிறக்கவுள்ளது. ஆப்பிரிக்கா இரண்டாகப் பிரியும் போது, இந்தியப் பெருங்கடலின் நீர் இந்த இடைவெளியில் புகுந்து புதிய பெருங்கடலை உருவாக்கும். இதனால் இந்த உள்நாட்டு நாடுகள் எதிர்காலத்தில் சொந்தக் துறைமுகங்களையும் கடலோரப் பகுதிகளையும் பெறும்!
66
புதிய பெருங்கடல் எப்போது முழுமையடையும்?
இது ஏதோ ஒரே நாளில் அல்லது ஒரு சில ஆண்டுகளில் நடந்து முடிந்துவிடும் நிகழ்வு அல்ல. ஆண்டுக்குச் சுமார் 8 முதல் 9 மில்லிமீட்டர் வேகத்தில் இந்தத் தட்டுகள் விலகிச் செல்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டம் முற்றிலும் இரண்டாகப் பிரிந்து, இடையே 6-வது புதிய பெருங்கடல் (Sixth Ocean) உருவாக இன்னும் 50 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் (5 to 10 Million Years) வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான அறிவியல் உண்மை :
இன்றைக்கு லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் ஒரே கண்டமாக இணைந்து தான் இருந்தன (பாஞ்சியா - Pangea). அவை பிளந்து பிரியும் போது தான் இடையே 'அட்லாண்டிக் பெருங்கடல்' உருவானது. அதே வரலாற்றை, மனித சமுதாயம் இன்று ஆப்பிரிக்காவில் 'லைவ்' ஆகப் பார்த்துக் கொண்டிருக்கிறது!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.