கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை நன்கு கலக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே தயாரித்து உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவவும். 30 - 40 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பு பயன்படுத்தி நன்கு கழுவவும்.
கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு முடியை அலசவும்.
கற்றாழை மற்றும் தயிர்
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவவும். இதை 30 நிமிடங்கள் ஊற விட்டு பின்னர் அலசவும்.
கற்றாழை மற்றும் ஆலிவ் எண்ணெய்
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவவும். இதை 30 - 40 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் தலைக்கு குளிக்கவும்.
கற்றாழை மற்றும் முட்டை
1 முட்டையை உடைத்து அதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை 20- 30 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் நீர் மற்றும் ஷாம்பு பயன்படுத்தி நன்கு கழுவவும்.