உங்க குழந்தை  உயரமா வளர.. இந்த 'யோகா' மட்டும் சொல்லி கொடுங்க!!

First Published | Oct 3, 2024, 11:20 AM IST

Yoga Asanas To Increase Height : உங்கள் குழந்தை உயரமாக வளரவில்லை என்று கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த 5 யோகாசனம் செய்ய சொல்லுங்கள். அவர்கள் உயரமாக வளர்வது உறுதி.

Yoga Asanas To Increase Kids Height In Tamil

குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களை உடல் ரீதியாக உறுதியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். இது அவர்களின் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருப்பது மட்டுமின்றி சரியான வயதில் உயரத்தையும் அதிகரிக்க செய்ய உதவுகிறது.

குழந்தைகளின் சரியான வளர்ச்சி, உடல் வளர்ச்சி என்று பார்க்கும்போது அவர்களுக்கு ஒவ்வொரு வயதும் கூட கூட அவர்களது எடையும், உயரமும் வைத்து தான் கணிக்கப்படுகின்றது. சில நேரங்களில் ஒரு சில குழந்தைகள் உடல் ரீதியாக நல்ல வளர்ச்சியை அடைந்து இருப்பார்கள். இன்னும் சில குழந்தைகளோ மிகவும் அதிக அளவில் வளர்ச்சி அடைந்திருப்பார்கள்.

Yoga Asanas To Increase Kids Height In Tamil

சில பெற்றோர்கள் தங்களது குழந்தை வயதிற்கு ஏற்ப சரியான உயரம் இல்லை என்பதை பற்றி மிகவும் அதிகமாக கவலைப்படுகின்றனர். ஒரு குழந்தை உயரமாக வளர்வதற்கு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதுமான உடல் செயல்பாடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், மரபணுக்களும் இதில் உண்டு.

என்னுடைய குழந்தை உயரமாக வளரவில்லையே என்று கவலைப்படும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல முறையில் வளர வேண்டும் என்றால், உங்கள் குழந்தைக்கு சில யோகா ஆசனங்களை சொல்லிக் கொடுங்கள். விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

குழந்தைகள் மிகவும் எளிதாக செய்யக்கூடிய சில யோகாசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து செய்து வந்தால் பலன்கள் உடனே தெரியும். எனவே உங்கள் குழந்தையின் உயரத்தை வேகமாக அதிகரிக்க உதவும் யோகாசனம் பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  ஒரு வயசான பிறகும் உங்க குழந்தைக்கு பேச்சு வரலயா? இதை செய்தால் உடனே பேசிடுவாங்க!!

Tap to resize

Yoga Asanas To Increase Kids Height In Tamil

குழந்தையின் உயரத்தை அதிகரிக்க உதவும் 5 யோகாசனங்கள் :

1. தடாசனம்

இந்த யோகாசனம் செய்ய முதலில், உங்கள் குழந்தையின் கால்களை ஒன்றாக வைத்து கைகளை உடலுக்கு நெருக்கமாக வைத்து நேராக நிற்க வைக்கவும். இப்போது கைகளை மேலே உயர்த்தி விரல்களை இணைக்கவும். பிறகு மெதுவாக கால் விரல்களில் இருந்து உடலை முடிந்தவரை மேல் நோக்கி இழுக்கவும். அப்படியே சில வினாடிகள் வைத்திருங்கள். பிறகு நிதானமாக கைகளை குறைக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குழந்தையின் முதுகு தண்டு விரிவடைந்து, உயரம் அதிகரிக்கும்.

2. சுகாசனம்

குழந்தையின் உயரத்தை அதிகரிக்க இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் உங்கள் குழந்தையின் இடுப்பை நேராக வைத்து ஆசனம் செய்ய வைக்கவும். பிறகு இரு கைகளையும் மெதுவாக மேலே உயர்த்தி வைக்கவும். இப்போது மெதுவாக வலது மற்றும் இடது புறமாக திருப்பவும். உடலின் இருபுறமும் ஒரு நீட்டிப்பை உருவாக்கும். இவ்வாறு இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகுத்தண்டு நெகிழிவாகி நீளம் அதிகரிக்கும். மேலும் இந்த ஆசனம் உங்கள் குழந்தையின் உயரத்தை வேகமாக அதிகரிக்கும்.

Yoga Asanas To Increase Kids Height In Tamil

3. புஜங்காசனம்

உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க இந்த ஆசனம் செய்ய முதலில் உங்கள் குழந்தையை யோகா மேட்டில் படுக்க சொல்லுங்கள் பிறகு கையை வைத்து மெதுவாக தலையையும், மார்பையும் முன்னால் இருந்து தூக்க சொல்லுங்கள். ஆனால் வயிறு மட்டும் தலையில் இருக்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சில வினாடிகள் இதே நிலையில் இருந்து பின்படுக்கவும். இந்த ஆசனம் முதுகுத்தண்டு பலப்படுத்தி, நெகிழ வைக்கிறது மற்றும் உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

4. ஹஸ்தபாதாசனம்

இந்த ஆசனம் செய்ய முதலில் உங்கள் குழந்தையை நேராக நிற்க சொல்லுங்கள். பிறகு இரண்டு கால்களையும் ஒன்றாக இணைக்கவும். மெதுவாக உங்கள் குழந்தையின் உடலை முன்னோக்கி வளைத்து கைகளால் கால் விரல்களை தொட சொல்லுங்கள். இந்த ஆசனத்தில் சில நொடிகள் இருந்துவிட்டு மெதுவாக பழைய நிலைமைக்கு வரவும். இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் எலும்புகள் தசைகள் பலப்படுத்தப்பட்டு, அவை நீட்டிக்கப்படும் இதனால் உயரமும் வேகமாக அதிகரிக்கும்.

Yoga Asanas To Increase Kids Height In Tamil

5. விருட்சசனம்

விருட்சசனம் செய்ய முதலில், உங்கள் குழந்தையை யோகா மேட்டில் நிற்க வையுங்கள். பிறகு ஒரு காலை முழங்காலில் வளைத்து மற்ற காலை தொடையில் வைக்கவும். இப்போது உங்கள் குழந்தையின் கைகளால் வணக்க நிலையை உருவாக்கி அவற்றை தலைக்கு மேலாக நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வையுங்கள். பிறகு மற்ற காலுடன் இந்த செயல் முறையை மீண்டும் செய்ய சொல்லுங்கள். இந்த யோகாசனம் சமநிலையை மேம்படுத்தி உடலை பலப்படுத்துகிறது. எனவே இந்த ஆசனத்தை உங்கள் குழந்தை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் குழந்தையின் உயரம் வேகமாக அதிகரிக்க தொடங்கும்.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் சின்ன பசங்க காய்ச்சலில் இருந்து தப்ப இதை மறக்காமல் செய்ங்க!

Latest Videos

click me!